வளைச்சு வளைச்சு புரமோஷன்.. டிவிட்டரில் ட்ரென்ட்டான கஜினிகாந்த்!
கஜினிகாந்த் பட புரமோஷன்கள் டிவிட்டரில் ட்ரென்ட்டாகியுள்ளன.
Recommended Video

சென்னை:கஜினிகாந்த் பட புரமோஷன்கள் டிவிட்டரில் ட்ரென்ட்டாகியுள்ளன.
ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'கஜினிகாந்த்'. இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார்.
'ஹரஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து' படங்களை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.

காமெடி படம்
காமெடி கலந்த குடும்ப படமாக கஜினிகாந்த் உருவாகியுள்ளது. மறதியை நினைவுபடுத்தும் ரஜினிகாந்தின் தர்மத்தின் தலைவன், மற்றும் சூர்யாவின் கஜினியை வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

ஆகஸ்ட் 3ஆம் தேதி ரிலீஸ்
கஜினிகாந்த் படம் ஜூலை 27ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது.

புரமோஷன் வேலையில் பிசி
இந்நிலையில் படத்திற்கான புரமோஷன்களில் படக்குழு படுபிசியாக உள்ளது. தொலைக்காட்சி சேனல்கள், சமூக வலைதளங்களில் படத்தை புரமோட் செய்யும் வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.

ட்ரென்ட்டான கஜினிகாந்த்
டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கஜினிகாந்த் பற்றிய செய்திகளே முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில் டிவிட்டரில்
#ComedyEntertainerGhajinikanth, #GhajinikanthPromotions ஆகிய ‘ஹேஷ்டேக்குகள்' ட்ரென்ட் ஆகியுள்ளன.


Click it and Unblock the Notifications











