For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாப் மன்னன் “மைக்கேல் ஜாக்சன்” கெட்டப்பில் “கானா பாலா”

    |

    சென்னை: "மொழிவது யாதெனில்' படத்தில் ஒரு பாட்டுக்கு "மைக்கேல் ஜாக்சன்" வேடத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார் "கானா" பாலா.

    யுவராஸ் இண்டெர்நேஷனல் தயாரிக்கும் படம் "மொழிவது யாதெனில்". இந்தப் படத்தில் பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் விராஜ், ராஜன், ரியாஷ், தேஜ், மீனு கார்த்திகா, லஸ்யா, பாலு ஆனந்த், தேனி முருகன், அஞ்சலிதேவி உட்பட பலர் நடிக்க கதை எழுதி இயக்கி உள்ளார் எஸ்.கோபாலகிருஷ்ணன்.

    இந்தப் படத்துக்காக நித்யன் கார்த்திக் இசையமைபில் நிகரன் எழுதிய, 'அட்டக்கத்தி... மொக்க பீசு.... வெத்துவேட்டு... சப்பகேசு..." என்கிற தத்துவார்த்தம் மிக்க பாடலை கானா பாலா பாடியதுடன் படத்தில் அந்தப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஆடிப் பாடி நடித்திருக்கிறார்.

    Ghana Bala in a new getup “Michael Jackson”…

    இந்தப் பாடல் பற்றி இசையமைப்பாளர் நித்யன் கார்த்திக் கூறுகையில், "இப்போது வரும் படங்களில் கானா பாலா, தவறாமல் ஒரு பாடலை பாடி நடித்து விடுகிறார். கானா பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பை அவரது பாடல்கள் உருவாக்கி தருகிறது.

    அதே போல "மொழிவது யாதெனில்" படத்தில் கானா பாலாவுக்காக ஒரு பாடலை பிரத்யேகமாக வெஸ்டர்ன் மெட்டில் உருவாக்கி அவரை பாட வைத்தோம். இந்தப் பாடல் அவருடைய பாடல்களில் மிகவும் முக்கியமானதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

    English summary
    Ghana Bala sing a song in a upcoming Tamil film “Mozhiyaavathu Yaathenil” with “Michael Jackson” replica getup.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X