தளபதி விஜய் என்னை தம்பி போல பாத்துக்கிட்டாரு.. கானா பாலசந்தர் மகிழ்ச்சி !
சென்னை : தளபதி விஜய் என்னை அரவணைத்து ஒரு தம்பி போல பாத்துக்கிட்டாரு என்று கானா பாலசந்தர் கூறியுள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் மாஸ்டர். இந்த படத்திலிருந்து வாத்தி கம்மிங் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பாடலை கானா பாடகரான பாலசந்தர் பாடியிருக்கிறார். இவர் இதற்கு முன் தெருக்கானா பாடியவர், பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலக்டிவ் குழுவில் பாடியவர் மற்றும் பல படங்களில் பாடி அசத்தியிருக்கிறார் முக்கியமாக ரஜினியின் பேட்ட படத்தில் வரும் மரணம் மாஸு மரணம் பாடலில் வரும் முக்கிய இருவரிகளை பாடி அசத்தியிருப்பார் .

கானா பாட்டு
தற்போது இவர் பாடியிருக்கும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதையடுத்து பாடலில் வரும் ஒரு நடன அசைவும் ரசிகர்களால் பெருமளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த பாடலின் நடன அசைவுகள் குழந்தைகளை சென்று அடைய வேண்டும் என்பதற்காக வடிவமைக்கபட்டதாக கானா பாலசந்தர் கூறினார் .

பெருசா கேளுங்க
கானா பாலசந்தர் இந்த பாடலை பாட அனிரூத் ஸ்டூடியோவுக்கு சென்ற போது பசிக்கிறது சாப்பிட இரண்டு இட்லி என கேட்டாராம். அதற்கு அங்கிருந்தவர்கள் விஜய் படத்திற்கு வந்துட்டு என்ன இட்லி கேட்டுட்டு இருக்கீங்க பெருசா கேளுங்க என்றவுடன் அனிரூத் மற்றும் இசைக்குழுவுடன் சிக்கன் சான்ட்விச் சாப்பிட்டதாக பாலசந்தர் பகிர்ந்திருக்கிறார் .

பிகிலில் பாட்டு
விஜயின் பிகில் படத்திலே பாலசந்தர் சில காட்சிகளில் வந்து நடித்து பாடியிருப்பார். என்னை பிடித்து போகத்தான் இந்த படத்திலும் எனக்கு விஜய் வாய்ப்பு அளித்திருக்கிறார் என்று பாலசந்தர் தெரிவித்தார். மேலும் படப்பிடிப்பின் போது விஜய் மிகுந்த அன்புடனும் அரவணைப்புடனும் ஒரு தம்பி போல பார்த்து கொண்டார். நாங்கள் உண்மையான அண்ணன் தம்பிகளாக ஆகிவிட்டோம் என்று பாலசந்தர் தெரிவித்தார். மேலும் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் விஜய்க்கு நான் பாடிய பாடல்களை பாடி காட்டுவேன். அவர் என் பாடல்களை விரும்பி கேட்பார் என்று மகிழ்ச்சியுடன் கூறினார் பாலசந்தர் .

தலையில் கலர்
பாலசந்தர் கானா பாடுவதில் சிறந்த கலைஞர். இவர் தலையில் எப்போதும் வித்தியாசமான கலர் சாயம் பூசப்பட்டிருக்கும் பலரும் ஏன் இப்படியான விஷசயங்கள் செய்கிறீர்கள் என்று பல இடங்களில் கேட்டுவந்தனர் இதற்கு பதிலளித்துள்ள பாலசந்தர் இது ரசிகர்களை கவரத்தான் வித்தியாசமான கவர்ச்சி ரசிகர்களை எளிதில் கவரும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











