தல சொன்ன 'அந்த ஒரு வார்த்தை' காதில் கேட்டுக்கிட்டே இருக்கு: ஜிப்ரான்
Recommended Video

சென்னை: இசையமைப்பாளர் ஜிப்ரான் அஜித்தை சந்தித்து பேசியுள்ளார்.
வாகை சூட வா படம் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் ஜிப்ரான். அவர் தனது இசையால் உலக நாயகன் கமல் ஹாஸனை கவர்ந்தார். இதையடுத்து அவர் தொடர்ந்து கமல் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.
கிட்டத்தட்ட கமல் ஹாஸனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆகிவிட்டார் ஜிப்ரான்.
அஜித்
ஜிப்ரான் அஜித்தை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது அஜித் ஜிப்ரானிடம் 'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' என்று கூறியுள்ளார். அஜித் கூறியது தன் காதில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக ட்வீட் செய்துள்ளார் ஜிப்ரான்.

மகிழ்ச்சி
அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தாடி, மீசை இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
ரசிகர்கள்
ஜிப்ரான் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்த தல ரசிகர்கள் இந்த கூட்டணிக்காக காத்திருப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

தல
விஸ்வாசம் படத்தில் பார்த்ததற்கு அஜித் தற்போது ஒல்லியாக தெரிகிறார். ஒரேயடியாக இல்லாவிட்டாலும் ஓரளவு அவர் தனது உடல் எடையை குறைத்திருப்பது புகைப்படங்களில் இருந்து தெரிகிறது.


Click it and Unblock the Notifications











