வாவ்.. தெறிக்கவிடும் ஜிப்ரான்.. பிக் பாஸ் தமிழ் 4 புரொமோவின் மியூசிக் மேக்கிங் வீடியோ ரிலீஸ்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவிலே வெளியாகப் போகிறது என்ற சிக்னல்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றன.

சொன்னப்படி கேளு மக்கார் பண்ணாதே எனும் கமல்ஹாசனின் சிங்கார வேலன் பட பாடலை, கொஞ்சம் பட்டி டிக்கரிங் பண்ணி உருவாக்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் 4 பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

கமலும் ஜிப்ரானும்

கமலும் ஜிப்ரானும்

சமீப காலமாக நடிகர் கமலுக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கும் நல்லதொரு கெமிஸ்ட்ரி ஏற்பட்டுள்ளது. தூங்காவனம் படத்திற்கு இசையமைத்த ஜிப்ரான், தொடர்ந்து கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். ஜிப்ரான் இசையில் வெளியாகும் பாடல்கள் வித்தியாசமாகவும் ரசிகர்களை கவரும் விதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வேற லெவல் அங்கீகாரம்

வேற லெவல் அங்கீகாரம்

மேலும், ஜிப்ரான் இசையில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான விஷ்ணு விஷாலின் ராட்சசன் படம் இந்தியளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சைக்கோ படத்தை பேய் படம் அளவுக்கு தனது இசையால் மிரட்டி இருந்தார் ஜிப்ரான். நானியின் 25வது படமான வி படத்திலும் ராட்சசன் இசை காப்பி அடிக்கப்பட்டதா என்ற சர்ச்சைகள் தற்போது கிளம்பி இருக்கின்றன.

பிக் பாஸ் பாடல்

பிக் பாஸ் பாடல்

இந்நிலையில், தற்போது மீண்டும் உலக நாயகன் கமல்ஹாசன் உடன் கை கோர்த்துள்ளார் ஜிப்ரான். அதுவும் நம்ம பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் புரொமோ பாடலை இசையமைத்துள்ளதே ஜிப்ரான் தானாம். கமல் நடிப்பில் வெளியான சிங்காரவேலன் படத்தில் வரும் சொன்னபடி கேளு பாடலை கொஞ்சம் மாற்றி அமைத்து இந்த பாடலை அவர் உருவாக்கி இருக்கிறார்.

இசை மேக்கிங் வீடியோ

இசை மேக்கிங் வீடியோ

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், பிக் பாஸ் தமிழ் சீசன் 4 புரொமோ பாடலுக்காக தான் எப்படியெல்லாம் பணியாற்றி உள்ளேன் என அவர் இசை மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் தேதி, போட்டியாளர்கள் பற்றிய அப்டேட்களை அவரிடமே ரசிகர்கள் கமெண்ட் செய்து கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X