ஜிப்ரானோட 'அம்மா ஐ லவ் யூ' வீடியோ சாங்... ஒரு மில்லியன் வியூவ்ஸ் கிடைச்சிருக்கு

சென்னை : இந்த உலகத்தில் அம்மாவின் அன்பிற்கு இணையாக வேறு எதையும் கூற முடியாது.

தமிழ் சினிமாவில் அம்மா சென்டிமெண்ட்டை மையமாக கொண்ட பாடல் எப்போதும் வெற்றி பெற்றுவிடும்

இதனிடையே ஜிப்ரானின் இசையில் கடந்த மாதம் வெளிவந்த அம்மா ஐ லவ் யூ பாடல் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

அம்மா சென்டிமெண்ட்

அம்மா சென்டிமெண்ட்


அம்மாவிற்கு இணையான அன்பு இந்த உலகத்தில் வேறெங்கும் நாம் பார்த்துவிட முடியாது. அது எந்த நாடானாலும் எந்த மொழியானாலும் அம்மா என்றால் அம்மா தான். இந்த அம்மா சென்டிமெண்டை வைத்து தமிழ் சினிமாவில் பல்வேறு படங்கள் வெளிவந்து சக்கை போடு போட்டுள்ளன.

கடந்த மாதம் வெளியீடு

கடந்த மாதம் வெளியீடு

இதேபோல அம்மா சென்டிமெண்ட்டை வைத்து உருவாக்கப்பட்ட பாடல்கள் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்து சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. இதனிடையே, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் கடந்த மாதம் 9ம் தேதி வெளியிடப்பட்டது அம்மா ஐ லவ் யூ பாப் இசை பாடல்.

அம்மாவின் ஏக்கம்

அம்மாவின் ஏக்கம்

அமித் அமரன் உருவாக்கத்தில் வெளியான இந்த பாடலில் அம்மாவின் தன்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லாத பிள்ளைகள் குறித்த ஏக்கத்துடன் தனது நாளை துவங்குவார் ஒரு அம்மா. தன்னுடைய வழக்கமான பணிகளை மேற்கொள்ளும் அவருக்கு அன்றைய நாளின் இறுதியில் சர்ப்ரைஸ் காத்திருக்கும்.

ஜிப்ரான் இசை

ஜிப்ரான் இசை

அவர் பிறந்த நேரத்திற்காக காத்திருந்து அவரது பிள்ளைகள் அவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை மேற்கொள்வார்கள். அவரது கண்கள் ஆனந்த கண்ணீரால் நிரம்பும். இத்தகைய அருமையான கான்செப்டுடன் ஜிப்ரானின் இசையும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும்? அதில் நடித்திருக்கும் நடிகர்களும் அருமையாக நிழலை நிஜமாக்கியிருப்பார்கள்.

1 மில்லியன் வியூவ்ஸ்

1 மில்லியன் வியூவ்ஸ்

தன்னுடைய குடும்பத்தினருக்காக வாழ்ந்துவரும் அனைத்து அம்மாக்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் என்று வீடியோவிற்கு கீழே தயாரிப்புக்குழு தெரிவித்துள்ளது. மொத்தத்தில் அம்மா ஐ லவ் யூ பாடல் அனைவரையும் வெகுவாக கவரும்வகையில் அமைந்துள்ளது. அதற்கு சமீபத்திய உதாரணம் இந்த பாடல் வெளியாகி ஒன்றரை மாதங்களில் 1 மில்லியன் பார்வைகளை தற்போது பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X