அதர்வா சகோதரர் ஆகாஷ் ஹீரோவாகிற படத்துக்கு இசையமைக்கிறார் ஜிப்ரான்

சென்னை : டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்துல நடிக்க இருக்காரு அதர்வா சகோதரர் ஆகாஷ் முரளி.

இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ள நிலையில் படத்திற்கு தற்போது இசையமைக்க தேர்வாகியுள்ளார் ஜிப்ரான்.

மேலும் ஹீரோயினாக நடிக்க பிரியங்கா அருள் மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

சிறப்பான படங்கள்

சிறப்பான படங்கள்

நடிகர் முரளி தன்னுடைய கேரியரில் சிறப்பான படங்களில் நடித்துள்ளார். இளம்வயது நாயகனாக அறிமுகமாக அவர் தான் வாழும் காலம் வரையில் தன்னுடைய நடிப்பை விடாமல் தொடர்ந்தார். அவருக்கான ரசிகர்கள் கூட்டம் தற்போதும் அவரது படங்களை விரும்பி பார்த்து வருகின்றனர்.

பானா காத்தாடி படம்

பானா காத்தாடி படம்

அவர் உயிருடன் இருக்கும்போதே அவரது மகன் அதர்வா நடிக்க வந்துவிட்டார். அவரது முதல் படமான பானா காத்தாடியிலும் நடிகர் முரளி சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சிறப்பான கதாபாத்திரங்களில் அதர்வா தன்னை சிறந்த நடிகராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ்

இந்நிலையில் அவரது சகோதரர் ஆகாஷ் முரளி நடிக்க வந்துள்ளார். இயக்குநர் விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார். விஷ்ணுவர்தன் பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களின்மூலம் புகழ்பெற்றவர். இந்த படத்தை சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

திருமணம் செய்த ஆகாஷ்

திருமணம் செய்த ஆகாஷ்

இதன் முதல் தயாரிப்பான விஜய்யின் மாஸ்டர் வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. ஆகாஷ் முரளி கடந்த ஆண்டில் சேவியர் பிரிட்டோவின் மகள் ஸ்நேகாவை திருமணம் செய்த நிலையில் தற்போது இவரை வைத்து சேவியர் பிரிட்டோ படம் தயாரிக்கவுள்ளார்.

பிரியங்கா அருள் மோகன் ஹீரோயின்

பிரியங்கா அருள் மோகன் ஹீரோயின்

இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க ஜிப்ரான் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ஹீரோயினாக நடிக்க பிரியங்கா அருள் மோகனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X