twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதுதான் ரியல் வெறித்தனம்.. சர்வதேச விருது வென்ற ராட்சசன் பின்னணி இசை!

    |

    சென்னை: விஷ்ணு விஷால் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படத்தின் பின்னணி இசைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால், அமலாபால், முனிஷ்காந்த், காளி வெங்கட், அம்மு அபிராமி, நான் சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சைக்கோ த்ரில்லராக வெளியான ராட்சசன் படம் இந்திய திரையுலகையே மிரள வைத்தது.

    Ghibran wins international award for Ratsasan score

    ராட்சசன் படம் மற்றும் படத்தின் இசைக்கு பல விருதுகள் கிடைத்துள்ள நிலையில், தற்போது மற்றுமொரு சர்வதேச அங்கீகாரம் ராட்சசன் பின்னணி இசைக்கு கிடைத்துள்ளது.

    ஜிப்ரான் இசையில் உருவான ராட்சசன் படத்தில், அதன் பின்னணி இசை பலராலும் பாராட்டப்பெற்றது.

    இந்நிலையில், கிழக்கு ஐரோப்பிய சர்வதேச திரைப்பட விழா 2019ல் ராட்சசன் பின்னணி இசை, பல வெளிநாட்டு படங்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.

    போலந்து நாட்டில் நடைபெற்ற இந்த விருது விழா ஃப்யூஷன் சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாகும்.

    ராட்சசன் படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த விருதினை பெற்றுக் கொண்டார்.

    விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த ராட்சசன் திரைப்படம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

    சைக்கோ த்ரில்லர் கதையாக உருவான ராட்சசன் திரைப்படம் வசூலை மட்டுமல்ல விமர்சகர்களின் பாராட்டுக்களையும் ரசிகர்களின் மனங்களையும் வென்ற படமாகும்.

    இந்த படத்தை இயக்கிய ராம் குமார், அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ghibran has now won the Best Original Score award at the ‘East Europe International Film Festival 2019’.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X