இரண்டாவது மனைவியுடன் விபத்தில் சிக்கிய விஜய்யின் ரீல் அப்பா.. இப்போ எப்படி இருக்காரு?
சென்னை: கில்லி, தில் என ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. மிகச்சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்த அவர்; இந்தியாவின் பல்வேறு மொழி திரைத்துறையில் தனது தடத்தை பதித்திருக்கிறார். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து சில வருடங்களுக்கு முன்பு ரூபாலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர்கள் இரண்டு அசாம் மாநிலத்தில் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த ஆஷிஷ் வித்யார்த்தி கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான சர்தார் படத்தில் நடித்து வெளிச்சம் பெற்றார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்ததன் காரணமாக வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் கொட்டி கிடைத்தன. அதன்படி Drohkaal, 1942: A Love Story, பாஸி, ஜீட், யாம்ராஜ் என ஏராளமான படங்களில் பல கேரக்டர்களை ஏற்றார். அவை அனைத்துமே அவரை முக்கியமான நடிகர் என்பதை பலருக்கும் நிரூபித்தன.
தமிழில் ஆஷிஷ் வித்யார்த்தி: தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக இருந்த அவரை; தில் படத்தில் தரணி தமிழுக்கு அழைத்து வந்தார். அதில் வில்லன் ரோலை ஏற்றிருந்த அவர்; அட்டகாசமான நடிப்பை நடித்து; தமிழிலும் தனது துண்டை போட்டார். தில் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ், தமிழன், பாபா, தம், ஏய், கில்லி, ஆறு, ஈ, அழகிய தமிழ் மகன், சொல்ல சொல்ல இனிக்கும் என இங்கும் பிஸியானார்.

கில்லிதான் டாப்: அவர் எக்கச்சக்க தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிய அடையாளத்தையும், புகழையும் கோலிவுட்டில் பெற்றூக்கொடுத்த படங்களில் ஒன்று கில்லி. அதில் விஜய்க்கு அப்பாவாக கலக்கியிருந்தார். முக்கியமாக படத்தில் விஜய்யின் நண்பர்கள் பற்றி அவர் பேசும் வசனமும், அதில் அவர் மாடுலேஷனும் இன்றுவரை சோஷியல் மீடியாக்களில் மீம் மெட்டீரியலாக சுற்றிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு திருமணங்கள்: அவர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி பெங்காலி, ஒடியா மொழி படங்களிலும் கலக்கியிருக்கிறார். கடந்த 2001ஆம் ஆண்டு பிலு வித்யார்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆர்த் என்ற மகனும் பிறந்தார். மொத்தம் 21 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஆஷிஷும், பிலுவும் கடந்த 2022ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டார்கள். அந்த டைவர்ஸுக்கு பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு ரூபாலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
விபத்தில் சிக்கிய ஜோடி: இந்தத் திருமண வாழ்க்கை அவர்களுக்கு நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். அப்போது வெளியே சென்ற அவர்கள் சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் வேகமாக வந்த வாகன்ம் ஒன்று இடித்ததில் இரண்டு பேரும் காயமடைந்தார்கள். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இப்போது உடல்நலம் தேறியிருப்பதாகவும், நானும், ரூபாலியும் மருத்துவ கண்காணிப்பில் நலமோடு இருப்பதாகவும் ஆஷிஷ் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











