கில்லி படத்தின் கிளைமேக்ஸ்ல இவ்ளோ பெரிய ஓட்டையா?.. விஸ்வாசம் படத்தையும் விட்டு வைக்கலயே.. செம மீம்!

சென்னை: சினிமாவில் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தி தான் அதை ஒரு 2.30 மணி நேர திரைப்படமாக காட்டுகின்றனர். அந்த இரண்டரை மணி நேரத்தில் பல யுகத்தையும் காட்டிட முடியும் ஒரு நாள் இரவில் நடப்பதாக பரபரப்பாக படத்தையும் கொடுக்க முடியும்.

ஆனால், எந்தவொரு படத்தையும் நாம் பார்க்கும் அதே கால அளவுக்குள் படமாக்க முடியாது. சில படங்கள் ஒரு மாதத்திலும், சில படங்கள் 6 வருடத்துக்கும் மேலும் உருவாகி வருகிறது.

Ghilli and Viswasam loop hole memes goes trending

ஆடு ஜீவிதம் படம் 16 வருட உழைப்பு என பிருத்விராஜ் கூறியுள்ளார். இதில், கன்டினியூட்டி மிஸ்ஸிங் ஹாலிவுட் முதல் கோலிவுட் படங்கள் வரை இருக்கத்தான் செய்யும். சில இடங்களில் செமி ஃபைனலில் தோற்று விட்டு ஃபைனலில் பார்த்துக் கொள்ளலாம் என பெரியளவிலான ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன.

லாஜிக் மிஸ்ஸிங்: சினிமா என்றாலே லாஜிக் இல்லாத ஒரு மேஜிக் தான். ஆனால், ரசிகர்களை எந்தளவுக்கு அந்த படம் லாஜிக்காகவும் உண்மைக்கு மிக அருகில் இருப்பது போல ஏமாற்றுகின்றனரோ அதுதான் பெரிய விஷயம். சில படங்களில் லாஜிக்கே இல்லை என்றாலும் சரியான மேஜிக் வொர்க்கவுட் ஆகி படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும். சில படங்கள் சொதப்பி விட்டால் இந்த படத்துல லாஜிக்கே இல்லை என ரசிகர்களே கலாய்த்து தள்ளுவார்கள். ஆனால், அவர்களே பல லாஜிக் இல்லாத படங்களுக்கு விசில் அடித்து பணத்தை செலவழித்திருப்பார்கள்.

Ghilli and Viswasam loop hole memes goes trending

கில்லி கிளைமேக்ஸ்: கில்லி படத்தில் செமி ஃபைனலில் தோற்று விட்டு ஃபைனலில் பார்த்துக் கொள்ளலாம் என சொன்னதையே பலரும் ட்ரோல் செய்து வந்தனர். அதே போல திரிஷா ஒவ்வொரு சீனிலும் எப்படி விஜய்க்கு டார்ச்சராக மாறுகிறார் என்றும் வீடியோக்கள் டிரெண்டாகின. இந்நிலையில், கில்லி படத்தின் கிளைமேக்ஸில் கபடி ஆடும் விஜய் அரை டவுசர் போட்டு ஆடுவார். அதன் பின்னர் நடக்கும் பிரகாஷ் ராஜ் உடனான சண்டையில் அவர் டிராக் பேன்ட் அணிந்திருப்பார். அதை பார்த்த ரசிகர் ஒருவர் நானும் ரவுடிதான் பார்த்திபன் டெம்பிளேட்டை வைத்து, "இவன் எந்த கேப்லடா pant ah மாத்திட்டு வந்தான்.." என மீம் போட்டு கலாய்த்துள்ளார்.

விஸ்வாசம் நயன்தாரா: அதே போல விஸ்வாசம் படத்தில் முதல் பாதியில் டாக்டராக வரும் நயன்தாரா இரண்டாம் பாதியில் எப்படி ஐடி நிறுவனத்துக்கு முதலாளியானார் என கேள்வி எழுப்பும் மீமும் டிரெண்டாகி வருகிறது. அப்பா கம்பெனியை பார்த்துக் கொள்ளும் நிலைமை வந்ததால் நயன்தாரா அங்கே 2வது பாதியில் பிசினஸ் உமனாக மாறுகிறார். போட்டி முடிந்த பின்னர் கில்லி விஜய் பேன்ட் மாற்றியிருக்கலாம் என ரசிகர்கள் விளக்கங்களையும் கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X