வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!

சென்னை: கில்லி ரீ ரிலீஸ் திரைப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், கடந்த நான்கு மாதங்களாக தியேட்டர் பக்கமே செல்லாத பல ரசிகர்கள் தற்போது விஜய் படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக வரும் நிலையில், அந்தப் படத்தை வாங்கி வெளியிட்டு மிகப்பெரிய லாபத்தை பார்த்துள்ள சக்தி ஃபிலிம் ஃபேக்டரியை சேர்ந்த சக்திவேலன் தற்போது நடிகர் விஜய்யை சந்தித்து மிகப்பெரிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

தனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் படத்தில் அறிமுகமாகும் போது இந்த மூஞ்சி எல்லாம் வியாபாரம் ஆகாது என விமர்சித்த தமிழ் சினிமா தற்போது தளபதியாக மாறியுள்ள நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், ஆடிப்போய் கிடக்கிறது.

Ghilli distributor Sakthivelan made a humble request to Thalapathy Vijay

இந்த ஆண்டு முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியானாலும் வசூல் நிலவரம் எப்படி இருக்கும் என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ள நிலையில் விஜய்யின் கோல்ட் திரைப்படம் பெரிய வசூலை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய படங்கள் எதுவும் பெரிதாக ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டு வராத நிலையில், மலையாள படங்கள் மட்டுமே தியேட்டருக்கு ரசிகர்களை கொண்டு வந்து கொண்டிருந்த நிலையில், கில்லி ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இதுவரை 17 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்க்கு மரியாதை: தமிழ்நாட்டில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கு மேல் கில்லி திரைப்படம் வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக கூறப்படும் நிலையில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரியை சேர்ந்த விநியோகஸ்தர் சக்திவேலன் கோட் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து மிகப்பெரிய ரோஜா மாளிகை அவருக்கு அணிவித்து கில்லி படத்தின் ரீ ரிலீஸ் வெற்றிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

வருஷத்துக்கு ஒரு படம்: மேலும், இதுதான் நல்ல சமயம் என நினைத்து அவர், ஒரே ஒரு கோரிக்கை சார் என நடிகர் விஜய்யிடம் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி விட வேண்டாம் சார். வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க, வியாபாரத்துக்காக சொல்லல சார், தியேட்டர்ல வந்து ரசிகர்களின் கொண்டாட்டத்தை பாருங்க என விஜய்யிடம் கோரிக்கை வைத்துள்ள வீடியோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம்: நடிகர் விஜய் சினிமாவை தாண்டி அரசியலுக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற நோக்கில் தமிழக வெற்றிக் கழகத்தை உருவாக்கி உள்ளார். தளபதி 69 படத்துக்கு பிறகு சினிமாவுக்கு குட்பை சொல்லப் போவதாகவும் அறிவித்துள்ள நிலையில், விஜய்யை தொடர்ந்து சினிமாவில் இருக்க வைக்க திரைத்துறையினர் போராடி வருகின்றனர். விநியோகஸ்தர் சக்திவேலனுடன் கில்லி பட தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னமும் வந்து விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X