லியோவை முந்திய கில்லி.. அஜித் ரசிகர்கள் பண்ணது இல்லீகல்.. ரோகிணி தியேட்டர் ஓனர் பேட்டி!
சென்னை: கில்லி திரைப்படம் மீண்டும் வெளியான நிலையில் தொடர்ந்து மூன்றாவது வாரமும் ரசிகர்கள் அந்த படத்தை தியேட்டர்களுக்கு சென்று கொண்டாடி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கில்லி படத்தின் ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு காட்சியும், அனைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு அத்துப்படியாக உள்ள நிலையில் தியேட்டர் முழுக்க திருவிழாவாக அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கில்லி படத்தின் ரீ ரிலீஸ் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படத்தை விட அதிக அளவிலான ஃபுட்ஃபால் உலகம் முழுவதும் வந்திருப்பதாக ரோகிணி தியேட்டர் ஓனர் ரேவந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கில்லி படமே ஒரு நாஸ்டால்ஜியா அனுபவம் தான் என்றும் ரசிகர்கள் மூன்றாவது வாரமும் சுமார் 600 பேர் தியேட்டரில் எழுந்து நின்று ஆட்டம் போடுவதெல்லாம் வேறு எந்த புது படத்துக்கு கூட தான் கண்டதில்லை என அவர் கூறியுள்ளார்.
30 கோடி வசூல்: கில்லி ரீ ரிலீஸ் திரைப்படம் 30 கோடி ரூபாய் வசூலை உலக அளவில் கலந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோகிணி தியேட்டரில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் இதுவரை விற்றுத் தீர்ந்து இருப்பதாக அந்த தியேட்டரில் ஓனர் ரேவந்த் பேட்டியில் கூறியுள்ளார். புதிய படங்களை முதல் நாளில் பார்க்க பல திரையரங்குகளில் 15 பேர் கூட இல்லாத நிலையில் அந்த காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வந்த அவலம் இந்த ஆண்டு அதிகம் நடைபெற்ற நிலையில், கில்லி படத்துக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு வியப்பை அளிப்பதாக கூறியுள்ளார்.

லியோவை முந்தியது: தீனாவை போல பர்த்டே ரிலீஸ் ஆக இல்லாமல் ப்ராப்பர் ரிலீசாக உலகம் முழுவதும் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் என கில்லி திரைப்படம் வெளியான நிலையில், அதற்கு சரியான வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் லியோ படத்தின் ஃபுட்ஃபாலை விட கில்லி படத்துக்கு வந்த ஃபுட் ஃபால் அதிகம் என ரேவந்த் கூறியுள்ளார். காசி தியேட்டர் ஓனரும் இதை உறுதிப்படுத்தி உள்ளார்.
அது இல்லீகல்: அஜித் பிறந்தநாளை முன்னிட்டு தீனா வெளியான நிலையில் ரோகிணி தியேட்டருக்குள் அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்தது ரொம்பவே தப்பான செயல் என்றும் அது இல்லீகல் என்றும் கண்டித்திருக்கிறார் ரேவந்த். மேலும், நான்கு பேர் சந்தோசத்துக்காக 600 பேரின் லைஃபை ரிஸ்க்கிற்கு கொண்டு செல்ல முடியாது என்றும் பாடலை ஒன்ஸ்மோர் போடாததால் பட்டாசு வெடிக்கும் என பொய்யாக பேட்டி அளித்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள் என்றும் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

அடுத்த ரெண்டு படம்: விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள கோட் திரைப்படம் மற்றும் தளபதி 69 என அடுத்த இரண்டு படங்களுக்கு தான் ரொம்பவே வெயிட்டிங் என ரேவந்த் தனது பேட்டியில் கூறியுள்ளார். சமீபத்தில் திருமணமான ரேவந்த் நடிகர் விஜய்யின் கட்சியிலும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் வெளியாகும் போது கில்லி ரீ ரிலீஸை விட கொண்டாட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











