சொல்லி அடிச்ச கில்லி.. ஒரு வாரத்துக்கு முன்பே தொடங்கிய டிக்கெட் புக்கிங்.. ரீ ரிலீஸில் சாதனை!
சென்னை: தளபதி விஜய் தமிழ்நாடு வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் விரைவில் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்லப் போவதாக அறிவித்துள்ளார். கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக தளபதி 69-வது படத்தில் நடிக்கப் போவதாகவும் அதன் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவையாற்ற போவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் நடித்து வெளியான மெகா பிளாக்பஸ்டர் திரைப்படம் கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகப்போகிறது. கோட் படத்துக்கு முன்னதாக விஜய் படத்தை தியேட்டரில் திருவிழா போல கொண்டாட தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக தயாராகி வருகின்றனர்.

இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து புதிய படங்கள் பெரிதாக ஓடாத நிலையில் பழைய சூப்பர் ஹிட் படங்களை கமலா சினிமாஸ் உள்ளிட்ட திரையரங்குகள் மீண்டும் ரீ ரிலீஸ் செய்து கரண்ட் பில்லுக்கு ஆவுது என்று தேற்றி வருகின்றனர்.
ரீ ரிலீஸ் டிரெண்ட்: தமிழ் சினிமாவில் புதிதாக வெளியான படங்கள் எல்லாம் மொக்கை படங்களாக ரசிகர்களை சோதித்து வந்த நிலையில் இதுக்கு பதிலாக சிவா மனசுல சக்தி, வாலி, அண்ணாமலை, காதலுக்கு மரியாதை, திருமலை, யாரடி நீ மோகினி, அழகி, பையா போன்ற படங்களை ரீ ரிலீஸ் செய்து தியேட்டருக்கு மீண்டும் ரசிகர்களை வரவைத்து வருகின்றனர்.
கில்லி ரீ ரிலீஸ்: தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் மீண்டும் ரசிகர்களுக்காக வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த வாரம் டியர் மற்றும் ரோமியோ என இரு தமிழ் படங்கள் வெளியான நிலையில், அடுத்த வாரம் விஜய்யின் கில்லி படத்தை ரீ ரிலீஸ் செய்கின்றனர்.
ஒரு வாரத்துக்கு முன்பே முன்பதிவு: புதிய படங்களை ஒரு நாளைக்கு முன்பு டிக்கெட் புக்கிங் தொடங்கினாலே முதல் நாள் முதல் ஷோவுக்கே காத்து வாங்கி வரும் நிலை கடந்த மூன்று மாதங்களாக இருந்து வரும் நிலையில், ஒரு வாரத்துக்கு முன்பே கில்லி படத்தின் ரீ ரிலிஸுக்காக டிக்கெட் முன்பதிவு தொடங்கி விட்டதாக கமலா சினிமாஸ் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சூடு பறக்கும் டிக்கெட் விற்பனை: மேலும், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் 2000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் ஒரு வாரத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி இருப்பதாக கமலா சினிமாஸ் தற்போது அறிவித்திருக்கிறது. விஜய்யின் கில்லி படத்தை ஒரு வாரம் ஓட்டினாலும் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாற்ற விஜய் ரசிகர்களும் தீவிரம் காட்டி டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு வெளியான ரீ ரிலீஸ் படங்களிலேயே அதிக வசூல் சாதனையை கில்லி படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கில்லி படத்தின் டிக்கெட் விலை 110 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கில்லி படத்தை தியேட்டரில் பார்த்து கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள்: தமிழ் புத்தாண்டு தினமான இன்று விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் முதல் பாடல் வெளியாகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடியுள்ள 'ஆர் யூ ரெடி' பாடல் வெளியானால் அது தனி ரெக்கார்டை யூடியூபில் நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











