Ghilli Re-Release: “அப்படி போடு போடு... ரீ-ரிலீஸாகும் கில்லி..” காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாக விஜய் ரசிகர்களுக்கு செம்ம வைப் காத்திருக்கிறது. அதாவது விஜய்யின் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரீ-ரிலீஸாகும் கில்லி
விஜய்யின் தளபதி 68 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போன்ற அப்டேட்கள் விரைவில் வெளியாக உள்ளன. அதேபோல் தளபதி 68 படத்தை அடுத்தாண்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்நிலையில் தளபதி 68க்கு முன்பாக விஜய் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் ஒன்று காத்திருக்கிறது.

சமீப காலமாக ஏற்கனவே ஹிட்டான படங்கள் ரீ-ரிலீஸாகி வருகின்றன. ரஜினியின் பாபா, முத்து, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான் படங்கள் தான் இந்த ட்ரெண்டை தொடங்கி வைத்தன. இதனால் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படமும் ரீ-ரிலீஸாகியுள்ளது. அதேபோல் தனுஷின் 3, மயக்கம் என்ன படங்களும் சமீபத்தில் மீண்டும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
ஆனாலும், கமலின் வேட்டையாடு விளையாடு மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு வசூல் செய்தது. இருப்பினும் ரீ-ரிலீஸாகும் படங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைப்பதால் விஜய்யின் கில்லியும் அடுத்து களமிறங்குகிறது. அதன்படி கில்லி திரைப்படம் அடுத்தாண்டு ஆரம்பத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் கேரியரில் சில்வர் ஜூப்ளி ஹிட் அடித்த திரைப்படம் கில்லி.
2004ம் ஆண்டு வெளியான கில்லி, தெலுங்கில் ஹிட் அடித்த மகேஷ் பாபுவின் ஓக்கடு படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கில்லி படத்தில் விஜய்யின் ஆக்டிங், ஆக்ஷன், இயக்குநர் தரணியின் மேக்கிங், வித்யாசாகரின் இசையில் பாடல்கள், பிஜிஎம் என அனைத்துமே அல்டிமேட்டாக இருந்தன. அதேபோல், விஜய் - த்ரிஷா இருவரின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களை கிறங்கடித்தன.
இவை எல்லாவற்றையும் ஒற்றை ஆளாக எதிரில் நின்று சமாளித்தார் பிரகாஷ்ராஜ். "என்ன செல்லம்.." என வில்லத்தனத்தில் வெரைட்டியாக மிரட்டியிருந்தார். ஒவ்வொரு சீனிலும் பிரகாஷ்ராஜ் கொடுத்த வைப் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதேபோல், அப்படிப் போடு போடு, அர்ஜுனரு வில்லு, ஆஞ்ச் பூஞ்ச் என பாடல்களும் ஃபையர் மோடில் இருந்தன.
இப்படி ஆல் ஏரியாவிலும் அசரடித்த கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸாகவுள்ளது 2கே கிட்ஸ்களுக்கும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் தளபதி 68 படத்துக்கும் பெரிய ஓபனிங் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











