அடேங்கப்பா.. நேத்து பூராவும் கில்லி ஹேஷ்டேக்தான்.. இன்னும் மவுசு போகலியே!
சென்னை : சன் தொலைகாட்சியில் நேற்று ஒளிபரப்பான விஜயின் கில்லி படத்தையே பெரும்பாலான மக்கள் பார்த்து ரசித்தனர்.
கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது இந்திய அரசு. இந்த நிலையில் குடும்பங்கள் அனைத்தும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் வீடுகளிலேயே முடங்கி, நேரத்தையும் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் வெறுத்து போய் வெளியே வர துவங்கினர். போலீஸாரின் கெடுபிடியால் மீண்டும் அவர்கள் வீடுகளில் முடங்கினர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நேற்று மாலையை பல தொலைகாட்சிகளில் வெற்றி பெற்ற படங்களை ஒளிப்பரப்பினர். இதில் சன் தொலைகாட்சி விஜயின் கில்லி படம் ஒளிப்பரப்பாக்கியது. அதே நேரத்தில் விஜய் தொலைகாட்சியில் புது படமான மிஷ்கின் இயக்கத்தில் உருவாக சைக்கோ படம் ஒளிப்பரப்பாகியது அதே நேரத்தில் மற்றொரு முக்கிய தொலைகாட்சியான ஜீ தமிழில் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 ஒளிப்பரப்பாகியது.
அதிகபடியாக மக்கள் விஜயின் கில்லி படத்தையே பார்த்துள்ளனர். நேற்று மாலையில் இருந்து இரவு வரையிலும் கில்லியை பற்றியே அனைவரும் சமூக வலைத்தளங்களில் பேசி வந்தனர் .
நேற்று உருவான கில்லி என்ற ஹாஸ்டேக் ட்விட்டரில் பல்லாயிரம் ரசிகர்களால் பேசபட்டு வைரலானது. இதை தொடர்ந்து ட்விட்டரில் இந்திய அளவில் கில்லி என்ற ஹாஸ்டேக் மூன்றாவது இடத்தை பிடித்தது .
இதனை கண்ட கில்லி பட ரசிகர்கள் பலரும் சந்தோஷத்தில் ஆழ்ந்தனர்.16வருடங்கள் கழித்தும் இன்றும் மனநிறைவுடன் படம் இருப்பதாக இணையத்தில் கூறி வருகின்றனர். நாங்கள் சிறு வயதில் விஜய்க்கு எப்படி ரசிகர் ஆனோம் என்ற அழகான விஷயங்களையும் இணையத்தில் பகிர்ந்து மகிழ்ந்தனர் ரசிகர்கள் .

கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1000க்கு மேல் சென்று கொண்டு இருகிறது. இந்த நேரத்தில் நாம் வீட்டுக்குள் இருப்பது மிக பெரிய அவசியமாகிறது. இந்த நிலையில் நேற்று கில்லிபடம் ஒளிப்பரப்பட்டது பெரிய அளவிளான சினிமா ரசிகர்களை வீட்டிலே அமர வைத்தது என்று கூறிலாம்.


Click it and Unblock the Notifications











