twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோஸ்ட் இஸ் அலைவ்.. கமல்ஹாசனின் விக்ரம்.. நடிகர் சாந்தனு போட்ட சூப்பரான விமர்சனம்!

    |

    சென்னை: கமல்ஹாசனின் விக்ரம் படம் வெளியாகி செம பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

    Recommended Video

    Vikram Public Review | Kamal Haasan | VijaySethupathi | Lokesh Kanagaraj | #vikramfdfs

    கைதி படத்தின் தொடர்ச்சியாகவே இந்த படம் அமைந்துள்ளது என்றும் விக்ரம் படத்தை பார்க்கும் முன்னதாக கைதி படத்தை பார்த்து விடுங்கள் என லோகேஷ் கனகராஜே ட்வீட் போட்டு இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், விக்ரம் படத்தை பார்த்த நடிகர் சாந்தனு தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

    Vikram Review: யாரு அந்த கோஸ்ட்? கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மிரட்டல்.. விக்ரம் விமர்சனம்!Vikram Review: யாரு அந்த கோஸ்ட்? கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மிரட்டல்.. விக்ரம் விமர்சனம்!

    டிரெண்டிங்கில் விக்ரம்

    டிரெண்டிங்கில் விக்ரம்

    சமூக வலைதளங்கள் முழுவதும் இன்று காலை முதல் விக்ரம் படத்தின் ஹாஷ்டேக்குகள் தான் டிரெண்டிங்கில் உள்ளன. விக்ரம், லோகேஷ் கனகராஜ், ஃபர்ஸ்ட் ஹாஃப், கைதி என ஏகப்பட்ட ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. விக்ரம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்

    சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்

    கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் எனும் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் சூர்யா கடைசியாக என்ட்ரி கொடுக்கும் காட்சிகளுக்கு சூர்யா ரசிகர்கள் தியேட்டர்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். விக்ரம் 3 படத்தில் கமலுக்கு வில்லனாக சூர்யா எப்படி மோதப் போகிறார் என்றும் விக்ரம் 3 உருவாகுமா? என்கிற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

    சாந்தனு விமர்சனம்

    சாந்தனு விமர்சனம்

    கோஸ்ட் இஸ் அலைவ் என ஃபயர் எமோஜிக்களை தெறிக்கவிட்டு விக்ரம் படத்திற்கான தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் நடிகர் சாந்தனு. கமல்ஹாசன் நடிப்பு மான்ஸ்டர் என்றும் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் இருவரும் தீயாக நடித்துள்ளனர் என்றும் அனிருத் இசையால் கொன்னுட்டாரு என்றும் குறிப்பிட்டுள்ளார் சாந்தனு.

    மச்சி கலக்கிட்ட

    மச்சி கலக்கிட்ட

    மாஸ்டர் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்த சாந்தனு இயக்குநர் லோகேஷ் கனகராஜை பார்த்து மச்சி கலக்கிட்ட என பாராட்டி உள்ளார். மேலும், படத்தின் சண்டை இயக்குநர்களான அன்பறிவு மாஸ்டர்கள், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், பத்தல பத்தல பாடலை கொரியோகிராஃபி செய்த சாண்டி, பாவக் கதைகள் ஆந்தாலஜியில் இடம்பெற்ற தங்கம் சிறுகதையில் தன்னுடன் நடித்த தங்கம் காளிதாஸ் ஜெயராம் என அனைவரையும் குறிப்பிட்டு மனமார பாராட்டி உள்ளார் சாந்தனு.

    English summary
    Actor Shanthanu’s review about Vikram trending in social media. He shares, Ghost is Alive and praises Kamal Haasan, Vijay Sethupathi, Fahad Faasil, Anirudh and his friend Lokesh Kanagaraj in his appreciation post.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X