Ghost: விஜய்ண்ணாவுக்கு செக் வைத்த சிவாண்ணா... லியோவுடன் மோதும் கோஸ்ட்... ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்

பெங்களூரு: கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவரஜ்குமார் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பனாகவும் கேங்ஸ்டராகவும் மிரட்டிய சிவராஜ்குமாரை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

இதனையடுத்து அவர் நடித்து வரும் கோஸ்ட் படம் மீது தமிழ் ரசிகர்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், லியோவுக்குப் போட்டியாக கோஸ்ட் திரைப்படமும் ரிலீஸாகும் என அறிவித்து, விஜய்க்கு செக் வைத்துள்ளார் சிவராஜ்குமார்.

 Ghost: Shivarajkumars Ghost will be released with Vijays Leo

லியோவுக்கு செக் வைத்த கோஸ்ட்: கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சிவராஜ்குமார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவருக்கு தமிழில் பெரிய அறிமுகம் இல்லாமல் இருந்தது. அதனை சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் சரி செய்துவிட்டது. ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸான ஜெயிலர் படத்தில், நரசிம்மா என்ற கேங்ஸ்டராக கேமியோ ரோலில் நடித்திருந்தார் சிவராஜ்குமார்.

இரண்டே காட்சிகளில் நடித்திருந்தாலும், ரஜினியை விட மாஸ் காட்டி, அவரது ரசிகர்களையே தன்பக்கம் இழுத்துவிட்டார் சிவராஜ்குமார். கன்னட சினிமா ரசிகர்களால் சிவாண்ணா என அழைக்கப்படும் சிவராஜ்குமாரை, தற்போது கோலிவுட் ரசிகர்களும் அப்படி அழைக்கத் தொடங்கிவிட்டனர். ஜெயிலர் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்குச் சென்ற சிவராஜ்குமாரை ரசிகர்கள் கொண்டாடிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்கள் ட்ரெண்டாகின.

 Ghost: Shivarajkumars Ghost will be released with Vijays Leo

இதனைத் தொடர்ந்து தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் சிவராஜ்குமார். இதனால், தமிழ்நாட்டில் இவரது கிரேஸ் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், சிவராஜ்குமார் நடித்துள்ள கோஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. ஸ்ரீனி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிவராஜ்குமார் கேங்ஸ்டராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக சிவராஜ்குமாரின் கோஸ்ட் வெளியாகும் அதேநாளில் தான் விஜய்யின் லியோ திரைப்படமும் ரிலீஸாகிறது. இதனால், லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு கோஸ்ட் பெரிய இடைஞ்சலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் படமும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. சிங்கிளாக களமிறங்கி மாஸ் காட்டலாம் என நினைத்துக்கொண்டிருந்த லியோவுக்கு தற்போது எல்லா பக்கமும் நெருக்கடிகள் வரத் தொடங்கிவிட்டன.

 Ghost: Shivarajkumars Ghost will be released with Vijays Leo

விஜய்யின் லியோ இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றன. அதாவது கோலிவுட்டின் முதல் ஆயிரம் கோடி வசூல் சாதனையை லியோ படம் தான் நிகழ்த்தப் போகிறது என அதிகம் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், தெலுங்கு, கன்னட மொழிகளில் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாவது லியோவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சிவராஜ்குமாரின் கோஸ்ட் கன்னடத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் லியோவுக்கு டஃப் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X