வெடி வைத்தும் பயப்படாத குரங்குகள் நடிகை சுஹாசினியை பார்த்து தெறித்து ஓட்டம்
சென்னை: வெடிச்சத்தம் கேட்டும் பயந்து ஓடாத குரங்குகள் பேய் வேடத்தில் இருந்த சுஹாசினியை பார்த்து மிரண்டு ஓடியுள்ளன.
பாரதிராஜாவின் உதவியாளராக இருந்த வினுபாரதி மூச் என்ற திகில் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் நிதின், மிஷா கோஷல், சுஹாசினி மணிரத்னம், பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மூச் ஒரு தாய் மற்றும் ஒரு பேயின் கதையாம்.

படப்பிடிப்பு
கிருஷ்ணகிரி அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் தென்னந்தோப்பில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அந்த தோட்டத்தில் ஏராளமான குரங்குகள் இருந்துள்ளன.

சுஹாசினி
படத்தில் சுஹாசினி பேயாக வருவாராம். அதற்காக அவர் பேய் போன்று மேக்கப் போட்டு அது காய்வதற்காக வெயில் அடிக்கும் இடத்தில் தோப்பில் உட்கார்ந்திருக்கிறார்.

குரங்குகள்
தோட்டத்தில் இருந்த சுமார் 50 குரங்குகள் பேய் வேடத்தில் இருந்த சுஹாசினியை பார்த்து மிரண்டு ஓடியுள்ளன.

தோட்டக்காரர்
வெடிகுண்டு வைத்தும் ஓடாத இந்த குரங்குகள் இந்த நடிகையை பார்த்து பயந்து ஓடிவிட்டன. மேலும் 4 தோப்புகளில் உள்ள குரங்குகளை விரட்ட அந்த நடிகையை கொஞ்சம் அனுப்புகிறீர்களா என்று இயக்குனரிடம் தோட்டக்காரர் கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











