twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமயங்களில் மனிதர்களை விட பிசாசுகள் தேவலை: மிஸ்கின்

    |

    சென்னை: சின்ன வயதில் அப்பா, அம்மா பயமுறுத்திய பேய்க் கதைகளின் காப்பி தான் தனது பிசாசு படம் எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் மிஷ்கின்.

    சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக் குட்டியும், யுத்தம் செய் என வித்தியாசமான படங்களைத் தந்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குநர் மிஷ்கின்.

    இவர் தற்போது பிசாசு என்ற படத்தை இயக்கியுள்ளார். மிஷ்கினின் இயக்கத்தில் பேய்ப்படமா என ஆச்சர்யப் படுபவர்களுக்கு, சில வேளைகளில் மனிதர்களை விட பிசாசுகள் மேலானவை என அவர் பதில் தருகிறார்.

    தற்போது பிசாசு படத்தின் இறுதிகட்ட வேலைகள் முடிந்துள்ள நிலையில், தி இந்து நாளிதழுக்கு மிஷ்கின் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், அதில் அவர் கூறியுள்ளதாவது:-

    சின்ன வயது பேய்க் கதைகள்...

    சின்ன வயது பேய்க் கதைகள்...

    அந்த மரத்துக்குக் கீழே போகாதே. நடு ராத்தியில் எங்கும் அலையாதே பிசாசு வரும் என்று அப்பா, அம்மா சின்ன வயதில் பயமுறுத்தினார்கள் அல்லவா அதிலிருந்து தான் பிசாசு படத்தின் கதையை நான் காப்பியடித்தேன்.

    பொய், கற்பிதம்...

    பொய், கற்பிதம்...

    அதே அம்மா, அப்பா ஒரு கட்டத்துக்குப் பிறகு பிசசு என்பதே பொய், கற்பிதம் என்று கற்பிக்க ஆரம்பித்தார்கள் அல்லவா அதிலிருந்தும் காப்பியடித்தேன்.

    வேதாளம்...

    வேதாளம்...

    அம்புலி மாமாவில் வரும் வேதாளத்திடமிருந்தும், பைபிளும், குரானும் சித்தரிக்கும் பிசாசிடமிருந்தும் கொஞ்சம் காப்பியடித்தேன்.

    அம்புலிமா...

    அம்புலிமா...

    தம்மபதத்தில் புத்தன் சொல்லிச் சென்ற ‘அம்புலிமா' என்ற கதையிலிருந்தும் கொஞ்சம் காப்பியடித்தேன். கொஞ்சம் ஷேக்ஸ்பியர், கொஞ்சம் டால்ஸ்டாய், கொஞ்சம் தாஸ்தயெவ்ஸ்கி என்றும் இவர்கள் சித்தரித்டஹ் பேய்களின் தாக்கமும் இந்தக் கதையில் உண்டு.

    பிசாசுகள் தேவலை...

    பிசாசுகள் தேவலை...

    சில வேளைகளில் மனிதர்களை விட பிசாசுகள் நல்லவர்கள் என்பது தான் எனது பிசாசு படத்தின் கதை.

    பிராயாகா...

    பிராயாகா...

    இப்படத்தின் நாயகி பிராயாகா கேரளத்திலிருந்து வந்திருக்கிறார். படத்தின் தலைப்பை மட்டுமல்ல, ஜீவனையும் தன் தோளில் சுமக்கும் பெண்.

    எல்லாரும் புதியவர்கள்...

    எல்லாரும் புதியவர்கள்...

    நாகா நாயகனாக வருகிறான். இவனது நண்பர்களாக அஸ்வத், ராஜ் என்று இரண்டு இளைஞர்கள். எல்லாருமே புதியவர்கள்.

    ராதாரவி...

    ராதாரவி...

    இப்படத்தில் தெரிந்த ஒரே முகம் அண்ணன் ராதாரவி. அவரை இந்தப் படத்தில் புதிதாகக் கண்டெடுப்பீர்கள். தனது ஆத்மாவை இதில் நடிக்க வைத்திருக்கிறார்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    The film director Mysskin shared the story line of his next venture 'Pisasu' to a Tamil daily. With the experience of 'Pisasu', he says that the ghosts are far better than humans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X