twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காஜல் அகர்வால், யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம்.. டைட்டிலே கலவரமா இருக்கேபா!

    |

    சென்னை : நடிகை காஜல் அகர்வால் தற்பொழுது இந்தியன் 2, ஆச்சர்யா உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார்.

    சமீபத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் என்ற ஹாரர் வெப் சீரிஸில் காஜல் அகர்வால் நடித்திருக்க இதனை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

    தமிழ்பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி !தமிழ்பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி !

    இந்நிலையில் காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் "கோஸ்டி" திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில்

    வெங்கட் பிரபு இயக்கத்தில்

    திருமணத்திற்குப் பிறகும் திரைப்படங்களில் சுறுசுறுப்பாக ஒப்பந்தமாகி நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மிகுந்த ஆர்வத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸ் வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டு பலரையும் கவர்ந்தது.

    பிரம்மாண்ட படைப்புகளிலும்

    பிரம்மாண்ட படைப்புகளிலும்

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் பாகம் 2 மற்றும் தெலுங்கில் அதிகப் பொருட்செலவில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் ஆச்சர்யா என பிரம்மாண்ட படைப்புகளிலும் காஜல் நடித்து வருகிறார்.

    நடிகை தமன்னா வெளியிட்டு

    நடிகை தமன்னா வெளியிட்டு

    இந்த நிலையில் குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கும் "கோஸ்டி" காமெடி கலந்த டார்க் ஃபேண்டசி திரைப்படத்தில் காஜல் அகர்வால் லீட் ரோலில் நடிக்க இதில் யோகி பாபு, ஊர்வசி, சுரேஷ் மோகன்,மொட்ட ராஜேந்திரன், கேஎஸ் ரவிக்குமார்,விஜய் டிவி தங்கதுரை, மயில்சாமி,மனோபாலா, ஸ்ரீமான், ஆடுகளம் நரேன்,சத்யன் மற்றும் தேவதர்ஷினி என பெரும் பட்டாளமே நடிக்க இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை தமன்னா வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Hey Sinamika படத்திற்காக பாடல் பாடிய Dulquer Salman | Brindha Master, Aditi Rao, Kajal
     காமெடி கலவரமும்

    காமெடி கலவரமும்

    தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால் போலீஸ் வேடத்தில் நடிக்க பார்லிமென்டின் முன்பு கம்பீரமாக அரசியல்வாதிகளின் படைசூழ உட்கார்ந்துகொண்டு இருக்க முன்னாள் ஹோமகுண்டம் எரிகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ள "கோஸ்டி" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த பலரும் ஹாரர் காமெடி மட்டுமல்லாமல் இதில் அரசியல் காமெடி கலவரமும் இருக்கும் போலயே என எதிர்பார்த்துள்ளனர்.

    English summary
    Kajal Agarwal starrer, Ghosty first look goes viral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X