‘ஐ அம் வெயிட்டிங்’... விஜய், அஜித் படங்களுக்காக காத்திருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான்
சென்னை: விஜய் மற்றும் அஜீத் படங்களுக்கு இசையமைக்கக் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
தமிழில் ‘வாகை சூடவா' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானதால் அடுத்தடுத்து ஜிபரானுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.
வாகை சூடவாவைத் தொடர்ந்து, ‘வத்திகுச்சி', ‘குட்டிபுலி', ‘நய்யாண்டி', ‘திருமணம் என்னும் நிக்ஹா' ஆகிய படங்களுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

கமல் படங்கள்...
இந்நிலையில், கடந்தவாரம் வெளியான அமரகாவியம் படத்திற்கும் இசை ஜிப்ரான் தான். தற்போது கமல் நடித்துவரும் ‘விஸ்வரூபம் 2', ‘உத்தமவில்லன்', ‘பாபநாசம்', ஆகிய மூன்று படங்களுக்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.
தல - தளபதி படங்கள்...
இந்நிலையில் தனது சமூகவலைதளப் பக்கம் வழியாக ரசிகர்கள்இன் கேள்விகளுக்குப் பதிலளித்தார் ஜிப்ரான். அப்போது ரசிகர் ஒருவர் ‘விஜய், அஜீத்திற்கு எப்போது இசையமைப்பீர்கள்?' என கேள்வியெழுப்பினார்.
ஐ அம் வெயிட்டிங்...
அதற்கு ஜிப்ரான் அளித்த பதிலில், 'துப்பாக்கி படத்தில் விஜய் பேசிய ‘ஐ அம் வெயிட்டிங்' என தெரிவித்துள்ளார்.
ரசிகன்...
மேலும் நான் இருவரின் ரசிகன், அவர்களுக்கு இசையமைப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என்றும் ஜிப்ரான் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











