twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கில்லி சாய்.. மகளிர் நடமாடும் டீ கடை.. ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார் !

    |

    சென்னை : பெண்கள் மட்டுமே இயக்கும் நடமாடும் டீ கடையை தொடங்கி வைத்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    சென்னையில் கில்லி சாய் என்ற பெயரில் நடமாடும் டீ கடைகளை கில்லி ஹாஸ்பிடாலிட்டி எனும் தனியார் நிறுவனம் அறிமுகபடுத்தியிருக்கிறது.

     Gilli chai an all women mobile tea shop grand opening

    இந்த கில்லி சாயில் 50க்கும் மேற்பட்ட டீ வகைகள் கிடைக்கும் என்றும் இந்த டீ கடையில் முழுக்க முழுக்க முன்னின்று பெண்களே பணியாற்ற உள்ளனர் என்றும் கூறப்படுகிறது .

    நேற்று சென்னையில் ஆர்.எஸ்.புறம்,பெசன்ட் நகர் போன்ற முக்கிய இடங்களில் இந்த நடமாடும் டீ கடையின் அலுவலகங்கள் திறக்கபட்டன. இந்த திறப்பு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னின்று நடமாடும் டீ கடைகளை திறந்து வைத்தார்.

    பொருளாதார சூழ்நிலையில் பெண்களும் சமபங்கு ஆற்ற வேண்டும் என்ற சூழலில் இப்படி பெண்களின் வேலைவாய்பை அதிகபடுத்தும் நோக்கில் உருவாக்கியிருக்கும் இந்த டீ கடைகளுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னின்று துவங்கி வைத்திருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது .

     Gilli chai an all women mobile tea shop grand opening

    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவின் பல விதிகளை உடைத்து தற்போது சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் . பெண்களின் போராட்டகுணம் பற்றி இவர் நடித்த கனா படம் மிக பெரிய வெற்றிபடாமாகும். அந்த படம் பல பெண்களையும் இவரை திரும்பி பார்க்க வைத்த படமாகும் .

    இந்த துவக்க விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார். இனி தமிழ்நாடு முழுக்க இது போன்ற நடமாடும் டீ கடைகளை பார்பதற்கு அதிகம் வாய்ப்புண்டு. பல பெண்களும் முன்னெடுத்து இந்த வேலையில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த நிறுவனம் 2000 பெண்களின் வேலைவாய்பை நோக்கி நகர உள்ளதாகவும் பல நடமாடும் டீ கடைகள் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது .

    பெண்கள் நடத்த போகும் இந்த நடமாடும் டீ கடைகளின் துவக்க விழாவில் தமிழ்நாட்டின் பல முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நடிகர் நாஸரும் விழாவில் கலந்து கொண்டுள்ளார் .மேலும் இயக்குனர் வசந்த்தும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தனது ஆதரவை வழங்கினார்.

    English summary
    Actress Aishwarya Rajesh opened mobile tea shops run by all women.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X