மேலும் ஒரு அதிர்ச்சி.. கொரோனாவுக்கு கில்லி பட நடிகர் மரணம்.. திரையுலகம் சோகம்!

சென்னை: பிரபல துணை நடிகரான மாறன் கொரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல துணை நடிகரான மாறன் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான வேதம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி திரைப்படத்தில் ஆதிவாசி கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார்.

தமிழில் பல படங்கள்

தமிழில் பல படங்கள்

உலக அளவில் சமீபத்தில் வெளிவந்த கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்களில் பிரபலமானார். மேலும் டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

25 ஆண்டுகளாக..

25 ஆண்டுகளாக..

அதிக படங்களில் இவர் வில்லன் கெட்டப்பில் வந்தாலும் காமெடி கதாபாத்திரத்திலேயே நடித்து வந்தார். பல மேடைகளிலும் கானா பாடல்களை பாடி இருக்கிறார். 25 ஆண்டுகளாக படங்களில் நடித்து வந்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

சொந்த ஊரான செங்கல்பட்டு நத்தம் வசித்து வந்த மாறனுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் மாறன்.

நேற்றிரவு மரணம்

நேற்றிரவு மரணம்

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சைப் பலனின்றி உயிர் பிரிந்தது. கொரோனாவுக்கு பலியான மாறனுக்கு 48 வயதாகிறது.

கொரோனாவுக்கு மரணம்

கொரோனாவுக்கு மரணம்

இயக்குநர்கள் தாமிரா, கேவி ஆனந்த், நடிகர் பாண்டு பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி என அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியாகி வந்த நிலையில் தற்போது நடிகர் மாறனும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

நெல்லை சிவா மரணம்

நெல்லை சிவா மரணம்

நேற்று மாலை பிரபல நகைச்சுவை நடிகரான நெல்லை சிவா திடீர் மாரடைப்பால் காலமானார். அந்த சோகத்தில் இருந்தே தமிழ் சினிமா இன்னும் மீளாத நிலையில் நடிகர் மாறனின் மரணம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X