ஒல்லி ஷகிலா- குண்டு ஷர்மிலி இணைந்த கைகள்!!

By Mayura Akilan

உண்மை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் எதிரும் புதிருமாக இருந்த இரண்டு கவர்ச்சி ஏரிகள் கைகுலுக்கிக் கொண்ட காட்சியை காணமுடிந்தது. அது ஷகீலாவும்,ஷர்மிளாவும்தான்.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு எதிரும் புதிருமாக இருந்த இந்த கவர்ச்சி குண்டுகள் இப்போது நட்பு பாராட்டியது எப்படி என்றுதான் அங்கு வந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

உண்மை படத்தில் லேடி தாதா வேடத்தில் நடிக்கும் ஷகீலா கொஞ்சம் இளைத்து கறுத்துப் போயிருந்தார்.

ஆனால் ஷர்மிளாவோ குண்டு குண்டாக இருந்தார். ஹார்மோன் பிரச்சினையாம் அதற்காக சிகிச்சை எடுப்பதாகவும் கூறினார் அதனால்தான் படங்களில் நடிக்க முடியவில்லையாம்.

கவர்ச்சிகளின் சண்டை

கவர்ச்சிகளின் சண்டை

ஆரம்பத்தில் காமெடி கலந்த கவர்ச்சி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார் ஷர்மிலி. கோவை சரளாவுக்குபதிலாக ஷர்மிலியை தனக்கு ஜோடியாக போடுமாறு கவுண்டமணி சிபாரிசு செய்யவே அவரது புண்ணியத்தில் ஷர்மிலிக்கு நிறைய படங்கள் வந்தன.

குண்டான ஷர்மிலி

குண்டான ஷர்மிலி

படங்கள் அதிகம் கிடைத்த சந்தோஷமோ என்னமோ, ஷர்மிலியின் உடல் பெருத்துப்போனது. அப்போது மலையாள கவர்ச்சிப் படங்களில் நடித்து கேரளாவையே அசரடித்துக்கொண்டிருந்தார் ஷகீலா.

ஷகிலாவுக்கு பதில்

ஷகிலாவுக்கு பதில்

ஷகிலாவின் புகழ் கொடியை கீழிறக்க ஷர்மிலியை அழைத்துக் கொண்டு போனார்கள். ஷர்மிலி வந்த நேரத்தில் ஷகீலாவுக்கு மார்க்கெட் அவுட் ஆனது.

சண்டையோ சண்டை

சண்டையோ சண்டை

இதனையடுத்து ஷகீலா கோலிவுட்டுக்குவந்துவிட மல்லுவுட் படங்களில் அவரது இடத்தைப் பிடித்தார் ஷர்மிலி. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான சண்டை உருவானது. ஷர்மிலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற அளவிற்கு வதந்தி பரவியது.

விடமாட்டேன் அவளை

விடமாட்டேன் அவளை

இந்த பொய் செய்திக்கு ஷகீலாதான் காரணம், எனது வரவைப் பொறுக்காமல், பொறாமையால் இப்படிச்செய்தி பரப்பியுள்ளார் அவர். ஷகீலாவை சும்மா விட மாட்டேன் என்று பொங்கிப் புலம்பினார். இவர்கள் எங்கேயாவது நேரில் சந்தித்துக் கொண்டால் நிச்சயம் குடுமிப்பிடி சண்டை நடக்கும் என்றும், அப்போது ஒரு சுமோ மல்யுத்தத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கோலிவுட்டில் பேச்சு அடிபட்டது.

ரொம்ப நெருக்கம்

ரொம்ப நெருக்கம்

ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக சமீபத்தில் உண்மை படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தித்துக் கொண்ட ஷகீலாவும், ஷர்மிலியும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மிகவும் நெருக்கமாக இருந்தனர்.

ஒரே ஆச்சரியம்தான்

ஒரே ஆச்சரியம்தான்

இவர்களின் நெருக்கத்தைப் பார்த்து அங்கு வந்திருந்தவர்களுக்கு எல்லாம் ஒரே ஆச்சரியம்தான். சண்டைக்கோழிகள் எப்போது சமாதானம் ஆனார்கள் என்றுதான் பேசிக்கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X