ஆபாச போட்டோ.. மகனை நினைத்து கலங்கும் நடிகை கிரிஜா ஓக்.. இனி பொறுத்துக்கொள்ள மாட்டேன்!
சென்னை: மராத்திய நடிகையான கிரிஜா ஓக் திடீரென இணையத்தில் ட்ரெண்டானார். மராத்திய நடிகையான இவர், இந்தி, கன்னட, படங்களில் நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு'தாரே ஜமீன் பர்' படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஷோர் இன் தி சிட்டி, ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ள இவர் திடீரென இணையத்தில் டிரெண்டானது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பிறந்த கிரிஜா ஓக், பிரபல மராத்தி நடிகர் கிரிஷ் ஓக்கின் மகள் ஆவாள். கிரிஜா கடந்த 2011 ஆம் ஆண்டு ஷுருத் குட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் திடீரென இவரின் புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி கிரிஜா ஓக் பேசப்படும் நடிகையாக இருக்கிறார்.

கிரிஜா ஓக்: இந்நிலையில், நடிகை கிரிஜா ஓக் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடைய புகைப்படங்கள் AI கொண்டு மார்ஃப் செய்யப்படுவது பற்றி வருத்தப்பட்டு பேசி இருக்கிறார். கடந்த மூன்று நாட்களாக சமூக வலைதளங்களில் பார்க்கம் போது கிறுக்குத்தனமாகவும், சிறப்பானதாகவும் இருக்கிறது. ரசிகர்களுக்கு திடீரென என்மீது கவனம் குவிந்துள்ளது. இதை எப்படி எடுத்துக் கொள்வதென எனக்கு தெரியவில்லை. நிறைய அன்பு, நிறைய கமெண்ட், குறுஞ்செய்திகள், போன் கால், சமூக வலைத்தளங்கள் மூலமாக வருவது மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கிறது. இணையத்தில் பரவும் மீம்ஸ் போஸ்டர்களை என்னுடைய நண்பர்களும் உறவினர்களும் அனுப்புகின்றனர். அவை நகைச்சுவையாகவும், க்ரியேட்டிவாகவும் இருக்கிறது. அதேவேளையில் சில மோசமான வகையில் AI மூலம் சித்தரிக்கப்பட்ட ஆபாசமான போட்டோக்களும் இணையத்தில் பரவி வருகிறது அவற்றை பார்ப்பதற்கு மனம் வேதனையாக இருக்கிறது.
ஆபாச போட்டோ: ஒரு போட்டோவை பார்த்து நான் நடுங்கிப் போனேன். இந்தச் செயல் முற்றிலும் அருவருப்பாக இருந்தது. இதுபோன்ற செயல்களைச் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் சமூக ஊடகத் தளங்கள் அதிக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், எனக்கு 12 வயது மகன் இருக்கிறான், இப்போது அவன் சோசியல் மீடியாவில் இல்லை என்றாலும், பிற்காலத்தில் அந்த போட்டோவை அவன் பார்த்தால் என்னாகும். அவன் மனதளவில் எவ்வளவு பாதிக்கப்படுவான். இதுபோன்ற விஷயங்கள் தன் குடும்பத்தினருக்கும் எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் தொடர்ந்து இதுபோன் சைபர் தாக்குதல்கள் மற்றும் டிஜிட்டல் மார்பிங் அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றனர். AI தொழில்நுட்பம் வளர்ச்சி இத்தகைய தவறான பயன்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இதுபோன்ற செயல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டேன் என்றும் கிரிஜா ஓக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











