»   »  நானும் சபரிமலை சென்றேன்: நடிகை கிரிஜா

நானும் சபரிமலை சென்றேன்: நடிகை கிரிஜா

Subscribe to Oneindia Tamil
நடிகை ஜெயமாலாவைப் போலவே நானும் சபரிமலைக்கு சென்றுள்ளேன் என கன்னட நடிகை கிரிஜாதெரிவித்துள்ளார்.

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றதாக கன்னட நடிகை ஜெயமாலாகூறினார். அப்போது சுவாமி ஐயப்பன் சிலையை தொட்டு வணங்கியதாகவும் தெரிவித்தார்.

இந்த பிரச்சனை பெரிய சர்ச்சையையும், விவாதத்தையும் உருவாக்கி உள்ளது. இந்த பிரச்சினை முடிவதற்குள்மற்றொரு கன்னட நடிகையான கிரிஜா தானும் சபரிமலைக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு சென்றது குறித்து அவர் கூறியதாவது,

கடந்த 1987ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி சபரிமலைக்கு புறப்பட்டு சென்றோம். என்னுடன் தாயார் பூர்ணிமா,பாட்டி நீலம்மா, சகோதரர் மகன் நரேந்திரா, எனது மகன் ஸ்ரூஜன், மகள் பூஜா ஆகியோர் வந்து இருந்தனர்.

நாங்கள் விரதம் இருந்து இருமுடி கட்டிதான் சபரிமலைக்கு சென்றோம். நான் அங்கு சென்ற போது என்னையாரும் தடுக்கவில்லை. ஆனால் நான் 18ம் படியில் செல்லவில்லை.

மற்றொரு புற வழியில்தான் சென்று சாமி கும்பிட்டேன். நாங்கள் சபரிமலைக்கு சென்ற போது எனது மகள்பூஜாவுக்கு 12 வயது இருக்கும். சபரிமலைக்கு சென்ற நடிகை ஜெயமாலா ஐயப்பன் சிலையை தொட்டுவணங்கியதாக கூறுவது நம்பத்தகுந்தாக இல்லை என்றார் கிரிஜா.

இதற்கிடையே ஜெயமாலாவை விசாரிக்க கேரளத்தில் இருந்து ஒரு குழு இன்று பெங்களூர் வரும் என்றுதெரிகிறது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil