twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிரிஷ் கர்னாடின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்த குடும்பத்தார்

    By Siva
    |

    Recommended Video

    பிரபல நாடக ஆசிரியரும், நடிகருமான கிரிஷ் கர்னாட் மரணம்- வீடியோ

    பெங்களூர்: மறைந்த நடிகர் கிரிஷ் கர்னாடின் கடைசி ஆசையை அவரின் குடும்பத்தார் நிறைவேற்றி வைத்துள்ளனர்.

    நேற்றைய தினம் சினிமா மற்றும் நாடக உலகிற்கு கருப்பு தினம் என்றே கூற வேண்டும். நேற்று காலை பிரபல நடிகரும், இயக்குநரும், நாடக எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் பெங்களூரில் காலமானார். மதியம் 2 மணிக்கு பிரபல நடிகரும், கதை-வசனகர்த்தாவும், நாடக எழுத்தாளருமான கிரேஸி மோகன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    சில காலமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கிரிஷ் கர்னாட் தான் உயிரிழக்கும் முன்பு தனது கடைசி ஆசையை தெரிவித்துள்ளார்.

    கிரிஷ் கர்னாட்

    கிரிஷ் கர்னாட்

    நான் இறந்த பிறகு என் உடல் மீது ஏகப்பட்ட மாலைகள், மலர் வளையம் வைக்கக் கூடாது. சாலை நெடுகிலும் மலர் தூவி என் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்லக் கூடாது. மேலும் என் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வி.ஐ.பி.க்கள் யாரும் என் வீட்டிற்கு வரக் கூடாது. என் இறுதிச் சடங்கு மிகவும் எளிமையான முறையில் நடைபெற வேண்டும் என்று கிரிஷ் கர்னாட் தனது கடைசி ஆசையை குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

    கோரிக்கை

    கோரிக்கை

    கர்னாட் பேச்சிற்கு மறுப்பேது. அவர் தெரிவித்ததுபடி அவரின் குடும்பத்தார் நடந்து கொண்டனர். கிரிஷ் கர்னாட் காலமாகிவிட்டார், தயவு செய்து யாரும் அஞ்சலி செலுத்த வீட்டிற்கு வர வேண்டாம். அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த விரும்புபவர்கள் இறுதிச் சடங்கு நடக்கும் இடத்திற்கு நேராக வருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கர்னாட் குடும்பத்தார் கோரிக்கை விடுத்தனர்.

    இறுதிச் சடங்கு

    இறுதிச் சடங்கு

    கர்னாட் குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று வி.ஐ.பி.க்கள் யாரும் அவரின் வீட்டிற்கு செல்லவில்லை. கிரிஷ் கர்னாடின் இறுதிச் சடங்கு நேற்று மதியம் 2 மணிக்கு பிரேசர் டவுனில் நடைபெற்றது. கர்னாடின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விடுமுறை

    விடுமுறை

    கிரிஷ் கர்னாடின் மறைவு செய்தி அறிந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் கர்னாடின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும் என்று தெரிவித்தார். இது தவிர கர்நாடகாவில் நேற்று அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    English summary
    Multi talented Girish Karnad's family has fulfilled his last wish.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X