சல்மானை கல்யாணம் செய்ய வீட்டை விட்டு ஓடி வந்த பெண்
சல்மான் கானை திருமணம் செய்யவேண்டுமென இளம்பெண் ஒருவர் வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார்
சென்னை: சல்மான் கானை திருமணம் செய்து கொள்வதற்காக ரசிகை ஒருவர் வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார்.
நடிகர்களை திரையில் பார்த்து ரசிக்கும் ரசிகைகள் ஒரு படி மேலே போய் அவர்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். அஜித், பிரசாந்த் போன்ற நடிகர்களின் அழகை பார்த்து அவர்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ரசிகைகள் வீட்டை விட்டு ஓடி வந்ததாக வரலாறு இருக்கிறது.

அதுபோல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு நடந்துள்ளது. 52 வயதாகும் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக உள்ளார். வயதானாலும் இவருக்கு அவ்வப்போது ரசிகைகளின் காதல் அம்புகள் எய்தப் பட்டுக்கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில், சமீபத்தில் பந்த்ராவில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்குள் குசும் என்ற 24 வயது இளம்பெண் நுழைய முயற்சி செய்துள்ளார். காவலாளிகள் அவரிடம் விசாரித்தபோது, தான் சல்மான் கானின் தீவிர ரசிகை என்றும், அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அதை சல்மானிடம் நேரில் சொல்லவே வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு போலீசார் விசாரித்ததில் அப்பெண் டேராடூனைச் சேர்ந்தவர் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது. பிறகு பெற்றோரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications











