சில்க் 2.0.. அவங்களே மறுபிறவி எடுத்து வந்துட்டாங்களோ.. ஷாக் தரும் ‘டிக்டாக்’ இளம்பெண்!

நடிகை சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் ஒரு பெண்ணின் டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Recommended Video

அச்சு அசலாக நடிகை சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் ஒரு பெண்ணின் டிக்டாக் வீடியோ

சென்னை: அச்சு அசலாக நடிகை சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் ஒரு பெண்ணின் டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சொக்க வைக்கும் கண்கள்.. செக்கச் சிவந்த இதழ்கள்.. கிறங்கடிக்கும் கவர்ச்சி.. சில்க் ஸ்மிதா... இந்த பேரைக் கேட்டாலே சொக்கி போவோர் ஏராளம். அந்த காந்த கண்களின் வசீகரம் இன்றும் பல சமூக வலைதளங்களின் வழியாக நம்மை இழுத்துக் கொண்டே தான் இருக்கிறது.

80கள் தொடங்கி 90களின் அரை இறுதி வரை தமிழ் சினிமாவை தன் பின்னால் ஓடவிட்ட கனவுக்கன்னி சில்க் ஸ்மிதா. 17 ஆண்டு கால சினிமா வாழ்வில், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 450 படங்களுக்கு மேல் நடித்தவர்.

வெப் சீரிஸ்

வெப் சீரிஸ்

கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொண்டார். சில்க் இறந்து 23 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் இன்னமும் அவருடைய மார்க்கெட் குறையவே இல்லை. அவரது வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக எடுத்தார்கள். பா.ரஞ்சித் அதை வெப் சீரிசாக எடுக்கிறார்.

ரசிகர்

ரசிகர்

எனக்கு தெரிந்த 60 வயதுக்கு மேல் வயதுடைய ஒரு பெரியவர் சரியான சில்க் பைத்தியம். அவருடைய மகன் அந்த பெரியவருக்கு சமீபத்தில் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்து, நெட் பேக்கும் போட்டுக்கொடுத்தார். அருணகிரிநாதரின் திருப்புகழை தந்தை கேட்கட்டும் என மகன் நினைத்திருப்பார் போலும்.

சில்க் இடம்

சில்க் இடம்

ஆனால் அந்த பெரியவர் என்னிடம் போனை கொடுத்து, 'பொன்மேனி உருகுதே..', 'நேற்று ராத்திரி யம்மா...', உள்ளிட்ட சிலுக்கின் பாடல்களை யூடியூப் ப்ளே லிஸ்ட்டாக செட் செய்து தர சொன்னார். (ப்ளே லிஸ்ட் செட் செய்கிறேன் என நானும் அதை ரசித்து பார்த்தது வேறு கதை). மும்தாஜ் முதல் முமைத்கான் வரை எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் தமிழில் வந்துவிட்டாலும், சில்க் ஸ்மிதாவின் இடத்தை பிடிக்க முடியவில்லை.

சில்க் 2.0

நிலைமை இப்படி இருக்க, சில்க் ஸ்மிதாவே மீண்டும் பிறந்து வந்துவிட்டார் என சொன்னால் நம்புவீர்களா. நிஜமா தாங்க சொல்றோம். டிக்டாக்கில் ஒரு பொண்ணு அப்படியே அச்சு அசலாக சில்க் மாதிரியே இருக்குது. அதுவும் அந்த பொண்ணு போடும் வீடியோக்கள் எல்லாம் சில்க்கின் பாடல்களை வைத்து தான்.

ஏமாற்றிய பிந்து மாதவி

சில்க் மாதிரியே இருக்கும் அந்த பெண்ணின் டிக்டாக் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோக்களை பார்த்து வாய் பிளந்து ஆச்சரியப்பட்டு வருகிறார்கள் நம் நெட்டிசன்கள். சில்க் விட்டுச் சென்ற இடத்தை பிந்து மாதவி நிரப்புவார் என கோலிவுட் இயக்குனர்கள் கணக்கு போட்டார்கள். ஆனால் அவர் எஸ்ஸாகிவிட்டார்.

சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா

சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா

இப்போது இந்த பெண்ணை தேடும் வேட்டையை ஆரம்பித்து விடுவார்கள் என நினைக்கிறேன். ஆப்ரேஷன் டிக்டாக் சில்க் ஸ்மிதா ஸ்டார்ட்ஸ் நவ்.. ஒருவேளை இப்பெண் யாரென்று தெரிந்து, அவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கி விட்டால், நிச்சய்ம் அவர் சில்க் 2.0 வெர்சனாக ஒரு ரவுண்டு வருவார் என்பது மட்டும் நிச்சயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X