அண்ணா உங்களை ‘ஹக்’ பண்ணட்டா.. க்யூட்டாக கேட்டு கட்டிப்பிடித்த மாணவி.. விருது விழாவில் விஜய் நெகிழ்ச்சி!
சென்னை: 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு அடுத்த கட்டமாக நடிகர் விஜய் இன்று கல்வி விருதுகளை வழங்கி வருகிறார். நிகழ்ச்சிக்கு வந்ததுமே மைக்கை எடுத்த விஜய், "2026ம் ஆண்டு தேர்தல் பற்றியோ, இளைய காமராஜர் என்றோ யாரும் அழைக்க வேண்டாம்" என்பதை தெளிவாக சொல்லி விட்டார்.
சமீபத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மாணவிகளை விஜய் மேடையில் கட்டிப்பிடிப்பது பற்றி மோசமாக பேசிய நிலையில், இன்று நடைபெற்ற விழாவில் மாணவி ஒருவர், "அண்ணா உங்களை ஹக் பண்ணட்டுமா?" என அன்போடு கேட்டு கட்டிப்பிடித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

மேலும், மாணவர்கள் வரும் ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வரவுள்ள நிலையில், அவருக்கு மேடையில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜன நாயகன் ஷூட்டிங் ஓவர்: நடிகர் விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படும் ஜன நாயகன் படத்தில் விஜய் போர்ஷன் படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இனிமேல், முழு நேர அரசியல்வாதியாகவே மாறி மக்களுக்கு சேவை செய்யும் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில், தக் லைஃப் பிரச்னை தொடர்பாக கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஜன நாயகன் படத்தை இங்கே வெளியிட விடமாட்டோம் என சில கமல் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

கல்வி விருது விழா: கடந்த 3 ஆண்டுகளாக நடிகர் விஜய் கல்வி விருது விழாவை பிரமாண்டமாக நடத்தி வரும் நிலையில், சில கட்சியினருக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அவரது செயல் எரிச்சலை உண்டாக்கியுள்ளது என்கின்றனர். 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெறும் மாணவ, மாணவியர்களை மேடைக்கு அழைத்து பரிசுகளை வழங்கி வருகிறார் விஜய். சமீபத்தில், நடைபெற்ற முதற்கட்ட விருது விழாவின் போது, மாணவிகளை விஜய் கட்டிப்பிடிப்பது குறித்து வேல்முருகன் விமர்சித்தது கடுமையான விவாதங்களை கிளப்பியது.
ஹக் பண்ணட்டுமா அண்ணா: மாணவிகள் விஜய்யை அப்பா என்றும் அண்ணா என்றும் அழைத்து வருகின்றனர். மகள் வயது மாணவிகளுடன் விஜய் கேஷுவலாக நின்றுக்கொண்டு போஸ் கொடுப்பதும், அவர்களின் அன்புக்கு மேடையில் அடி பணிவதுமாக இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று நடைபெற்ற விருது விழா நிகழ்ச்சியில், மாணவி ஒருவர், "அண்ணா உங்களை ஹக் பண்ணட்டுமா" என க்யூட்டாக கேட்க, அதுக்கென்னம்மா வா என விஜய் கட்டிப் பிடித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ காட்சிகள் தீயாக பரவி வருகின்றன.
எங்க அம்மாவுக்கே அட்வைஸ்: இன்னொரு மாணவி மேடை ஏறி பேசும் போது, எல்லாரும் ஏதோ இப்போதான் அரசியலுக்காக விஜய் சார் மாணவர்களுக்காக பேசுறாருன்னு நினைக்கிறாங்க. ஆனால், எங்க அம்மாவுக்கே அவர் 20 வருஷத்துக்கு முன்னாடியே அட்வைஸ் பண்ணியிருக்காரு. ஸ்கூல் கட் அடிச்சிட்டு விஜய் சாரை பார்க்கப் போனப்ப, பார்க்க முடியாதுன்னு சொல்லியிருக்கார். என்ன வேணா எப்ப வந்தும் பார்க்கலாம். ஆனால், படிப்பு தான் முக்கியம் என்றார். அவங்க மகள் நான் படிச்சிட்டு இன்னைக்கு தளபதியோட பேச்சைக் கேட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கேன் என்று பேசியதும் விஜய் அவரது அம்மாவிடம் அப்படியாம்மா எனக் கேட்டு விசாரித்ததும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











