தர்பார் பத்தி என்னென்னமோ சொல்றீங்க.. இவங்க பண்றது வேற மாதிரில்ல இருக்கு.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: தர்பார் படத்தை தியேட்டரில் பார்க்கும் பெண்கள் ரஜினியின் பாடலுக்கு எழுந்து குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த வியாழக்கிழமை வெளியான படம் தர்பார். இதில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவும் வில்லனாக சுனில் ஷெட்டியும் நடித்துள்ளனர். இந்த படம் கலவையான விமர்சனங்ளை பெற்று வருகிறது.

அவதூறு வழக்கு

அவதூறு வழக்கு

அதே நேரத்தில் படம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது. போலீஸ்காரர்களை இழிவுபடுத்தும் வகையில் ரஜினிகாந்த் நடித்திருப்பதாக கூறி ரஜினிகாந்த், ஏஆர் முருகதாஸ், மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சொதப்பல்

சொதப்பல்

இதனிடையே சசிகலாவின் ஜெயில் ஷாப்பிங் குறித்த வசனமும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அதற்கு கத்தரி போட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்த நெட்டிசன்கள் படத்தின் முதல் பாதிதான் நன்றாக உள்ளது, இரண்டாவது பாதி போர் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

தீர்ந்துவிட்டதா?

தீர்ந்துவிட்டதா?

மேலும் சிலர் எஆர் முருகதாஸ் படம் போன்றே இந்தப் படம் இல்லை. முருகதாஸுக்கு என்ன ஆனது? அவரது சரக்கு தீர்ந்துவிட்டதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கொண்டாட்டம்

அதே நேரத்தில் படம் வேற லெவலில் உள்ளது என ரஜினி ரசிகர்கள் படத்தை பாராட்டி வருகின்றனர். படத்தையும் கொண்டாடி வருகின்றனர்.

சண்டக்கோழி போல

சண்டக்கோழி போல

இந்நிலையில் பெண்கள் சிலர் தர்பார் படத்தை பார்த்துவிட்டு ரஜினியின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளனர். சண்டக்கோழி படத்தில் மீரா ஜாஸ்மின் தியேட்டரில் ஆடும் ஆட்டத்தை போல் பெண்கள் தியேட்டரில் ஆட்டம் போட்டிருக்கின்றனர்.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

இளம் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் செம ஆட்டம் ஆடியிருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X