காதலனை பிரதர் என காதலி அழைப்பதில் தப்பில்லை.. காதலில் இது புது ட்ரெண்ட்! - ஆர்யா
காதலனை காதலி பிரதர் என்று அழைப்பதிலும் தப்பில்லை. காரணம் இன்று ட்ரெண்ட் வேறு மாதிரி உள்ளது என்றார் நடிகர் ஆர்யா.
ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் 'ராஜா ராணி' இந்த படத்தை அட்லீ இயக்கியிருந்தார்.
ஏ.ஆர்.முருகதாசின் 'ஏ.ஆர்.எம். புரோடக்ஷன்' மற்றும் 'பாக்ஸ் ஸ்டார்', 'நெக்ஸ்ட் பீக் பீலிம்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருந்தன.

வெற்றி விழா
படம் திரைக்கு வந்த 5-வது நாளிலேயே பெரும் வசூலைக் குவித்துள்ளதால், அதன் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடினார்கள். இந்த விழா சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள ‘பிரசாத் லேப்' தியேட்டரில் நேற்று மாலை இந்த விழா நடந்தது.

ரூ 12 கோடி வசூல்
விழாவில், நடிகர் ஆர்யா கலந்துகொண்டு பேசும்போது, ‘‘நான் இதுவரை நடித்த படங்களிலேயே மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ள படம் ‘ராஜா ராணி' தான். இந்த படம் இதுவரை ரூ.12 கோடியே 12 லட்சம் வசூல் செய்து இருக்கிறது'' என்று கூறினார்.
அதன்பிறகு, செயதியாளர்கள் கேள்விகளுக்கு ஆர்யா பதிலளித்தார

பெண் பார்க்கிறார்களாமே!
வீட்டில் உங்களுக்கு பெண் பார்க்கிறார்களாமே என்று கேட்டபோது, "அப்படித்தான் வீட்டில் பேசிக்கொள்கிறார்கள். வெளியிலும் பேசிக்கொள்கிறார்கள். என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம், என் மனைவியை நான் இன்னும் கண்டுபிடிக்கவில்லை," என்றார் ஒன்றுமே தெரியாத மாதிரி.

நயன்தாரா எப்படி?
‘ராஜா ராணி' படத்தில் நயன்தாரா நடிப்பு எப்படி என்ற கேள்விக்கு, "அவர் காதலனை இழந்த துக்கத்தில் அழுகிற காட்சியில் நிஜமாக அசந்து விட்டேன்," என்றார். கூடவே எதற்கும் இருக்கட்டும் என நினைத்து, நஸ்ரியா பற்றியும் நல்லவிதமாக நாலு வார்த்தை சொல்லி வைத்தார்.

காதலன் பிரதர்!!
அடுத்த கேள்வி, ஒரு காதலனை காதலி, ‘பிரதர்' என்று அழைக்கலாமா? என்பது. காரணம், படத்தில் அப்படித்தான் அழைக்கிறார் காதலி.
அதற்கு ஆர்யா அளித்த பதிலில், "காதலர்கள் ட்ரெண்ட் இப்போது வேறு மாதிரி இருக்கிறது பிரதர். அதனால் காதலி தன் காதலனை அப்படி அழைப்பதில் தப்பில்லை என்றே கருதுகிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











