கங்குவா பார்த்து காது ரிப்பேர்.. டாக்டரை பார்க்கப் போறோம்.. ரீல்ஸ் போட்டு பங்கம் பண்ணும் பெண்கள்!
சென்னை: சூர்யா நடிப்பில் இதுவரை வெளியான எந்த ஒரு திரைப்படமும் இந்த அளவுக்கு ட்ரோல் செய்யப்பட்டது கிடையாது. கடைசியாக தியேட்டரில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கூட கலவையான விமர்சனங்களை தான் பெற்றதே தவிர அதிகளவில் ட்ரோல் செய்யப்படவில்லை.
மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட ஆதிபுருஷ், இந்தியன் 2, தேவரா படங்கள் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டதை போல கங்குவா திரைப்படமும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

இயக்குநர் சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து செய்துவிட்டார் என்றும் சூர்யா படத்தைப் பார்க்காமலே இத்தனை புரமோஷன்களை செய்து மக்களை ஏமாற்றினாரா? அல்லது படத்தைப் பார்த்துவிட்டு எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என நினைத்து இந்த மோசடியை செய்தாரா? என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
மக்களே திட்டுறாங்க: விமர்சகர்களை தாண்டி பொதுமக்களே கங்குவா படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி பேசும் பல யூடியூப் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன. நடிப்பின் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த சூர்யா தானும் பான் இந்தியா ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசையால் தான் இப்படி ஒரு படத்தில் நடித்துள்ளார் என்றும் படம் பார்க்கவே முடியவில்லை. தமிழ் சினிமா ரசிகர்கள் ஒன்றும் முட்டாள் கிடையாது என்றும் வயதானவர்கள் கூட கொந்தளித்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தது. ஆனால், கங்குவா படத்திற்கு அது கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை என்கின்றனர்.
காது ரிப்பேர் ஆயிருச்சு: கங்குவா படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், ஏகப்பட்ட இன்ஸ்டா ரீல்ஸ் போடுபவர்கள் இந்தியன் 2வுக்கு குதிரை போல ஓடி போட்டதை போல இந்த படத்தை பார்த்து விட்டு காது ரிப்பேர் என வீடியோ போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக பெண்கள் எல்லாம் கலாய்க்க ஆரம்பித்திருப்பது சூர்யா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நெருப்பு மாதிரி இருக்கும்னு: காதில் பஞ்சை வைத்து கட்டிக் கொண்டு செல்லும் வயதான பெண் ஒருவரை கோலம் போடும் இளம் பெண் அழைக்க கேட்காதவர் போல செல்லும் அந்த அக்காவை நிறுத்தி அந்த இளம் பெண் என்ன ஆச்சு எனக் கேட்கிறார். அதற்கு என் பையன் நெருப்பு மாதிரி இருக்கும் என ஒரு படத்துக்கு அழைத்துச் சென்று வெறுப்பேத்துற படத்தைக் காட்டினான். அங்கே அவர்கள் போட்ட சத்தத்தால் காது கிழிந்து விட்டது. இன்னும் 2 நாளைக்கு இப்படித்தான் இருக்கும் என சொல்லிவிட்டு நகர்கிறார்.
தியேட்டர்ல தான் போய் பார்ப்பேன்: இப்படியெல்லாம் வன்மத்தை கக்கினால் 2000 கோடி வசூலை எப்படி எடுக்கிறது. நான் தியேட்டருக்குத்தான் போய் பார்ப்பேன். இவங்க சும்மா சொல்றாங்கன்னு அந்த பெண் போய் பார்த்துவிட்டு அடுத்த நாள் கோலம் போடும் போது அவருடைய காதிலும் பஞ்சை வைத்து கட்டுக் கட்டியிருப்பது போலவும் இருவரும் டாக்டரை பார்க்க செல்வது போலவும் ரீல்ஸ் போட்டு மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். இந்த அவமானம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஒரு படத்துக்குத் தேவையா என சூர்யாவின் ஹேட்டர்கள் அதை ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











