'தல 55' படத்தில் பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்வார் அஜீத்: கௌதம் மேனன்
சென்னை: 'தல 55' படத்தில் வரும் அஜீத் பெண்களின் மனதை கொள்ளை கொள்வார் என்று இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கௌதம் மேனன் அஜீத் குமாரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். தற்போதைக்கு 'தல 55' என்று அந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படம் குறித்து கௌதம் மேனன் கூறுகையில்,

இரட்டை வேடம்
படம் பற்றி கூற ஏராளமான விஷயங்கள் உள்ளது. அது குறித்து ஒவ்வொன்றாக தெரிவிக்கிறேன். படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் வருகிறாரா என்பது குறித்து நான் தற்போதைக்கு தெரிவிக்க விரும்பவில்லை.

டார்லிங்
படத்தில் இமோஷன், ஆக்ஷன் இருக்கும். இந்த படத்தில் அஜீத்தின் கதாபாத்திரம் பெண்கள் மனதை கொள்ளை கொள்ளும்படி இருக்கும்.

ஆயிரம் தோட்டாக்கள்
என் படத்திற்கு ஆயிரம் தோட்டாக்கள் என்று தலைப்பை இறுதி செய்யவில்லை. நான் இன்னும் தலைப்பை தேர்வு செய்யவில்லை.

அஜீத்
நம் படத்திற்கு பெயர் என்ன கௌதம்? என்று அஜீத் என்னிடம் கேட்டார். இன்னும் தலைப்பை முடிவு செய்யவில்லை. இரண்டு நாட்கள் ஷூட்டிங்கில் இருந்து லீவு எடுத்து தலைப்பை தேர்வு செய்து வருகிறேன் என்று அவரிடம் தெரிவித்துள்ளேன்.

தலைப்பு
அஜீத் கதாபாத்திரத்தின் பெயரையே படத்திற்கு தலைப்பாக வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றார் கௌதம்.


Click it and Unblock the Notifications