புதுப்பேட்டை படத்தோட பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவை பாக்க முடியலை... கீதாஞ்சலி செல்வராகவன் வருத்தம்

சென்னை : புதுப்பேட்டை படத்தின் 15வது ஆண்டு கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

படத்தின் அடுத்த பாகம் குறித்த புதிய அப்டேட்டை நேற்றைய தினம் இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் காட்சியை தான் தன்னுடைய கல்லூரி நாட்களில் பார்க்க முடியாததற்கான காரணத்தை கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.

தனுஷ் -செல்வராகவன்

தனுஷ் -செல்வராகவன்

புதுப்பேட்டை படம் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் சிறப்பாக அமைந்த படம். இதன் 15வது ஆண்டு கொண்டாட்டத்தை அந்த படக்குழுவினர் தற்போது கொண்டாடி வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் படத்திற்கு பாராட்டுக்கனை தெரிவித்துள்ளதுடன் படத்தின் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

ஹின்ட் கொடுத்த இயக்குநர்

ஹின்ட் கொடுத்த இயக்குநர்

இந்நிலையில் படத்தின் 15வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ள படத்தின் இயக்குநர் செல்வராகவன், கூடிய விரைவில் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பணிகள் துவங்கவுள்ளதாக ஹின்ட் கொடுத்திருந்தார்.

கீதாஞ்சலி செல்வராகவன் வெளிப்படை

கீதாஞ்சலி செல்வராகவன் வெளிப்படை

இந்நிலையில் அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இன்றைய தினம் படம் குறித்த தன்னுடைய நினைவலைகளை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். தன்னுடைய கல்லூரி நாட்களில் காலேஜை கட்டடித்துவிட்டு செல்ல முடியாமல் படத்தின் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவை மிஸ் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

படம் குறித்த ஆய்வறிக்கை

படம் குறித்த ஆய்வறிக்கை

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே படத்தை தன்னுடைய நண்பர்களுடன் சென்று பார்த்ததாகவும் படத்தை கண்டு தான் மிகவும் வியப்படைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய மாஸ்டர் டிகிரிக்காக இந்த படம் குறித்த ஆய்வறிக்கையை தான் மேற்கொண்டு சமர்ப்பித்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X