காதல் வர காரணம் அதுதான்.. செல்வராகவன் எப்படிப்பட்ட கணவர்? மனம் திறந்த கீதாஞ்சலி!

சென்னை: காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன் பிறகு பல வெற்றி படங்களை இயக்கி தற்போது, சில படங்களில் நடித்து வரும் இவர், இரண்டாவதாக கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தனது கணவர் செல்வராகவன் குறித்து கீதாஞ்சலி பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.

தமிழ் திரையுலகில் தனக்கென முத்திரை பதித்த இயக்குனர்களில் செல்வராகவன் மிகவும் முக்கியமான ஒருவராக இருக்கிறார். பல முன்னனி நடிகர்கள், இசையமைப்பாளர்களை தூக்கிவிட்ட பெருமை செல்வராகவனுக்கு உண்டு. இவர் காதல் கோட்டை படத்தில் நடித்த சோனியா அகர்வாலை காதலித்து வந்த நிலையில், 2006ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Gitanjali selvaraghavan shared about her love story

நடிகை சோனியா அகர்வால் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். திருமணம் ஆன 4 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவனும் சோனியா அகர்வாலும் விவாகரத்து பெற்றனர். இருவரும் ஒத்துப்போகவில்லை என்ற காரணத்தால் பிரிந்து வாழ முடிவு செய்து விவாகரத்து பெற்றனர். செல்வராகவன், 2011ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.

சோனியா அகர்வாலை பிரிந்து தனிமையில் இருந்த செல்வராகவன், இரண்டாம் உலகம் படத்தை எடுத்த போது, அந்த படத்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாம் உலகம் படத்தின் கதையை படித்து செல்வராகவன் மீது காதல் வந்தது அந்த காதல் நாட்கள் செல்ல செல்ல இன்னும் ஆழகமாகிக் கொண்டே தான் செல்கிறது என்றார்.

மேலும் நான் முதல் பிரசவத்திற்கு பிறகு தாய் பால் சரியாக வராததால் மன அழுத்தத்தில் இருந்தேன். அந்த நேரத்தில் எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பேன். தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்ததால் உடல் எடை கூடிக்கொண்டே போய்விட்டது. அதன் பிறகு தான் இப்போது இயல்பாகி இருக்கிறேன். அந்த நேரத்தில் கோவத்துல தட்டு, டம்ளர் பறக்கும். அதை புரிந்து கொண்ட செல்வா என்னை நன்றாக பார்த்திக்கொண்டார் என்று கீதாஞ்சலி, யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X