’ஏ’ சர்டிபிகேட்னா தப்பா புரிஞ்சுக்கறாங்க.. அதுக்குப் பதில் 18 +னு கொடுக்கலாம்.. இயக்குநர் ஆதங்கம்!

மனோஜ் பீதா இயக்கத்தில் குருசோமசுந்தரம் நாயகனாக நடித்துள்ள படம் வஞ்சகர் உலகம்.

சென்னை: படங்களுக்கு சென்சாரில் 'ஏ' சர்டிபிகேட்டுக்குப் பதில் 18+ என கொடுத்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் 'ஏ' என்றால் அது வேறு மாதிரி நினைக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார் வஞ்சகர் உலகம் பட இயக்குனர் மனோஜ் பீதா.

லாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா இயக்கியிருக்கும் படம் 'வஞ்சகர் உலகம்'. குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், அழகம் பெருமாள், ஜான் விஜய், அனிஷா அம்ப்ரோஸ் நடித்திருக்கும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.

இவ்வாரம் வெள்ளியன்று இப்படம் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் 25 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக ரசிகர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

போராட்டங்கள்:

போராட்டங்கள்:

அப்போது பேசிய அப்பட இயக்குநர் மனோஜ் பீதா, "இப்படத்திற்கென கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் திரைக்கதை எழுத மற்றும் முன் தயாரிப்பு பணிகளுக்காக எடுத்துக் கொண்டோம். குறிப்பிட்ட பட்ஜெட்டில் படம் எடுப்பது ரொம்பவே கஷ்டம். ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் இருந்தன. சரியான திட்டமிடல் மூலம் ஒளிப்பதிவாளர் ரோட்ரிகோ நல்ல காட்சிகளை கொடுத்திருக்கிறார்.

அழகம் பெருமாள்:

அழகம் பெருமாள்:

நான் செல்வராகவன் சாரின் பெரிய ரசிகன். நாங்கள் பள்ளியில் படிக்கும்போது கட் அடித்து விட்டு போய் பார்த்த படம் புதுப்பேட்டை. அந்த படம் பார்த்தபோதே நாங்கள் படம் எடுத்தால் அழகம் பெருமாள் அந்த படத்தில் இருக்கணும்னு நினைத்தோம்.

ஹீரோயின்:

ஹீரோயின்:

முதல் படம் நானே எழுதி இயக்குவதில் எனக்கு உடன்பாடே இல்லை. மேற்கத்திய தாக்கத்தில் படம் இருக்க திட்டமிட்டு உழைத்தோம். சாந்தினி படத்தின் மிகப்பெரிய பலம். ஜான் விஜய் பாடி லாங்குவேஜ் புதிதாக இருக்கும். 4 மணி நேரம் இருந்த படத்தை எடிட் செய்து மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார் ஆண்டனி.

வேறு மாதிரி நினைக்கிறார்கள்:

வேறு மாதிரி நினைக்கிறார்கள்:

சென்சாரில் 'ஏ' சான்றிதழ் கொடுப்பதற்கு பதில் 18+ என கொடுத்தால் நன்றாக இருக்கும். 'ஏ' என்றால் அது வேறு மாதிரி நினைக்கிறார்கள்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X