Vishal - ’முதல்ல அதை செய்யட்டும் அப்புறம் அரசியலுக்கு வரட்டும்’.. விஷால் அப்பா பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரே

சென்னை: செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஷால். சில ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அவர் கடைசியாக மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். அடுத்ததாக ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துவருகிறார். மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துவரும் அவர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையை படித்த பலரும் விஷால் எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கணித்திருக்கின்றனர். இந்தச் சூழலில் அவரது தந்தை ஜி.கே.ரெட்டி விஷாலின் அரசியல் ஆசை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

சினிமா துறையில் இருப்பவர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பது ஒன்றும் தமிழ்நாட்டுக்கு புதிது அல்ல. அண்ணா, எம்ஜிஆர், விஜயகாந்த், சரத்குமார், பாக்யராஜ், டி.ராஜேந்தர் என பலர் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள். விஜய்யும் தற்போது தமிழக வெற்றி கழகம் என்று கட்சியை தொடங்கியிருக்கிறார். அவரது அரசியல் எண்ட்ரி பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் இனி தமிழ்நாட்டின் அரசியல் சூழலும், போக்கும் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

 GK Reddy Talks about Vishal Political Entry Here are the Full details

விஷால் ஆசை: இதற்கிடையே விஷாலும் தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு தொடர்ந்து செய்துவருகிறார். ஆதரவு, வசதியற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, விவசாயிகளுக்கு உதவுவது என தொடர்ந்து அந்தச் செயல்களில் ஈடுபட்டுவருகிறார். அதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாவது வழக்கம். அது பெரும்பாலும் பாராட்டை பெற்றாலும் ஒரு சில சமயங்களில் ஓவர் டோஸ் ஆகி கடுமையான கிண்டலுக்கு உள்ளான சம்பவங்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் மக்கள் இயக்கம்: நிலைமை இப்படி இருக்க விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்ததை அடுத்து விஷால் நேற்று தனது மக்கள் நல இயக்கத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார். அதில் வித்தியாசம், விவேகம், விடாமுயற்சி என்று வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'எதிர்காலத்தில் இயற்கை வேறு முடிவு வைத்திருந்தால் மக்கள் பணி ஆற்ற தயாராக இருக்கிறேன்' என்று கூறினார். அதனை படித்த பலரும், விஷால் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவிருக்கிறார் என்று பேச ஆரம்பித்துள்ளனர்.

விஷால் தந்தை கருத்து: இந்நிலையில் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி இதுகுறித்து கூறுகையில், "விஷால் முதலில் திருமணம் செய்துகொள்ள வேண்டும். விஜய், அஜித், சூர்யா மாதிரி நிறைய சம்பாதிக்க வேண்டும். திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டு பிறகு அரசியலுக்கு வந்தால் நல்லது" என்றார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கட்டடத்தை கட்டி முடித்துவிட்டுத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று விஷால் சபதம் எடுத்திருப்பது நினைவுகூரத்தக்கது.

விஷால் அறிக்கை: முன்னதாக விஷால் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், "சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு தடிகளாக, சமூக சேவகளாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், "இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு" என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

அடுத்தக்கட்டம்: அடுத்தக்கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்க்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் 'தேவி அறக்கட்டளை' மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைளையும் என் மக்கள் தல இயக்கம் மூலம் செய்து வருகிறேன். நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, "நன்றி மறப்பது நன்றன்று" என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நாள் கருதுகிறேன்.

இயற்கை முடிவு வைத்திருந்தால்: தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X