பார்ன் சைட்டில் என் படம்....அதிர்ந்து போனேன்...மனம் திறந்த நடிகை விசித்ரா

சென்னை : தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டும் என்றும் மனதை விட்டு மறைய மாட்டார்கள். அப்படி மறையாத நடிகை தான் விசித்ரா.

90களில் கொடி கட்டி பறந்த விசித்ரா, 90ஸ் கிட்டுகளின் கனவு குயினாக இருந்தார்.

அம்சமான இடை உடைய இவரை, 'மடிப்பு அம்சா' என வர்ணித்து மயங்கியவர்களே ஏராளம். நீண்ட நாட்களாக திரையில் தென்படாத இந்த நடிகை யூடியூப் சேனல் ஒன்றுக்கு மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

விசித்ரா

விசித்ரா

கவர்ச்சி கன்னியாக அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா ஆகியோர் பேசப்பட்டனர். இவர்கள் காலத்துக்கு பின் பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் விசித்ரா. இவர், சின்னத்தாய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தலைவாசல் படத்தில், மடிப்பு அம்சா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பேசப்பட்டார். அவரை ரசிகர்கள், மடிப்பு அம்சா என்று செல்லமாக அழைக்கிற அளவுக்கு பிரபலமானார்.

பிறந்தது சென்னையில்தான்

பிறந்தது சென்னையில்தான்

விசித்ரா யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், என்னுடைய உண்மையான பெயர் ஜெயா, சினிமாவுக்காக விசித்ரா என்று மாற்றி வைக்கப்பட்டது. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான், சென்னை கேகே நகரில் உள்ள ஒரு பள்ளியில் என்னுடைய பத்தாம் வகுப்பை முடித்தேன் என்றார்.

குடும்பத்தில் பிரச்சினை

குடும்பத்தில் பிரச்சினை

நான் பீக்கில் இருந்த காலகட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்டேன். காதலிக்கும் போது கண்ணுக்கு எதுவும் தெரியாது, ஆனால் திருமணமான பிறகு அவருடைய உறவினர்கள் நடிகை என்பதால் என்னிடம் பல கேள்விகளை கேட்டனர். இதனால், திருமணமான 3 நாட்களில் எங்களின் உறவில் பிரச்சனை வந்தது. அதன் பிறகுதான் சினிமாவை விட்டு விலகி கணவர், குழந்தைகள் என வாழ்க்கையை மாற்றிக் கொண்டேன் என்றார்.

மிகவும் காயப்பட்டேன்

மிகவும் காயப்பட்டேன்

குழந்தைகள், குடும்பம் என்று 18 வருடமாக சினிமாவில் எந்த வித தொடர்பும் இல்லாமல் இருந்தேன். ஆனால்,ஒரு இணையதள பக்கத்தில் என்னுடைய ஆபாச படத்தைப் பார்த்துவிட்டு அப்படியே உடைந்து போய்விட்டேன். அது என்னை மிகவும் காயப்படுத்தியது என்று வருத்தத்துடன் விசித்ரா அந்த பேட்டியில் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X