எனக்கு அது ஒத்தே வராது: மணிரத்னம் பட ஹீரோயின் ஓபன் டாக்
சென்னை: கிளாமர் கதாபாத்திரம் தனக்கு பொருத்தமாக இருக்காது என்று அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.
தமிழ், இந்தி, மலையாளம், மராத்தி, தெலுங்கு படங்களில் நடிப்பவர் அதிதி ராவ் ஹைதரி. மணிரத்னத்தின் காற்று வெளியிடை படம் மூலம் கோலிவுட் வந்தவர் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறார்.
மறுபடியும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிதி
மணி சார் படத்தில் மீண்டும் நடிக்க காத்திருக்கிறேன் என்று பேட்டிகளின் போது கூறினார் அதிதி. அவர் விருப்பம் நிறைவேறி மீண்டும் மணிரத்னம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தயாரிப்பாளர்கள்
நான் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பது தனி ஒரு அனுபவம். நான் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக சிலர் பேசுகிறார்கள். நான் சம்பளத்தை உயர்த்தினால் அவர்களுக்கு என்ன வந்தது, கவலைப்பட வேண்டியது தயாரிப்பாளர்கள் அல்லவா என்று கேட்டுள்ளார் அதிதி ராவ் ஹைதரி.

ஒத்து வராது
சம்பளத்தை விட நல்ல படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவள் நான். நான் மாடர்ன் உடை அணிந்தாலும் ஹோம்லியாகவே தெரியும். எனக்கு கிளாமர் பொருத்தமாக இருக்காது என்று அதிதி தெரிவித்துள்ளார்.

நடிப்பு
காற்று வெளியிடை படத்திலேயே தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்துவிட்டார் அதிதி. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் அவரின் நடிப்பை பாராட்டினார்கள். செக்கச் சிவந்த வானம் படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











