Theatre Release Movies: இந்த வாரம் தியேட்டரில் என்னென்ன படம் ரிலீஸ் தெரியுமா?

சென்னை: இந்த மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் வெளியானது. இதைத் தொடர்ந்து மணிகண்டனின் லவ்வர், சந்தானத்தின் வடக்குபட்டி ராமசாமி, ஜெயம் ரவியின் சைரன் திரைப்படங்கள் வெளியாகின. இந்த படத்தைத் தொடர்ந்து இந்த வாரம் தியேட்டரில் என்னென்ன படம் வெளியாக உள்ளது என்று பார்க்கலாம்.

கிளாஸ்மேட்ஸ்: மறைந்த நடிகர் மயில்சாமி கடைசியாக நடித்த திரைப்படம் கிளாஸ்மேட்ஸ். குட்டிப்புலி சரவண சக்தி இயக்கி உள்ள இந்த படத்தில் அங்கையர் கண்ணன், அபி நக்ஷ்த்ரா, சரவண சக்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Glassmates, Ranam, Birthmark February 23rd theatre release movies

ரணம்: ஷெரிப் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள திரைப்படம் ரணம். வைபவின் 25வது படமாக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, பதமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்துள்ள இத்திரைப்படத்துக்கு அரோள் கரோலி இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 23ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

ஆபரேஷன் லைலா: ஸ்ரீகாந்த், ஸாதிகா ஷர்மா, இமான் அண்ணாச்சி மற்றும் வின்சென்ட் அசோகன் நடித்துள்ள திரைப்படம் ஆபரேஷன் லைலா. செல்வம் பொன்னையன் தயாரிப்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி இப்படத்தின் மீதான ஆவலை தூண்டி உள்ளது. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 23ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

பெர்த் மார்க்: அறிமுக இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கி உள்ள திரைப்படம் பெர்த் மார்க். பிரசவத்தினால் பெண்களுக்கு வயிற்றில் ஏற்படும் தழும்பை குறிக்கும் வகையில் இத்திரைப்படத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் நாயகனாக சார்பட்டா பரம்பரையில் டான்சிங் ரோஸாக அனைவரையும் கவர்ந்த ஷபீர் நடித்துள்ளார். அவரது மனைவியாக மிர்னா நடித்துள்ளார். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது.

பாம்பாட்டம்: மல்லிகா செராவத் நடித்த பாம்பாட்டம் திரைப்படம் கடந்த வாரமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இத்திரைப்படம் வெளியாகவில்லை .இதையடுத்து இப்படம் பிப்ரவரி 23ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ஜீவன், நடிகை ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் பிரியா, சுமன், பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இனியன் ஜே. ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அம்ரீஷ் இசை அமைத்திருக்கிறார். வி.சி வடிவுடையான் இயக்கத்தில் நான்கு வருடங்களுக்கு முன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

சைரன்(தெலுங்கு): வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடந்த 16ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் சைரன். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்ற இத்திரைப்படம் தெலுங்கில் வரும் வெள்ளிக்கிழமை அதாவது பிப்ரவரி 23ந் தேதி வெளியாக உள்ளது.

பிரம்மயுகம்(தெலுங்கு): பூதகாலம் படத்தை இயக்கி மிரட்டிய ராகுல் சதாசிவன் இந்த முறை மம்மூட்டிக்காக 17ம் நூற்றாண்டை சேர்ந்த கதையை படமாக கொடுத்திருக்கிறார். கேரளாவின் மெகாஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் மம்மூட்டியின் நடிப்பில் திகிலூட்டும் படமாக கடந்த வாரம் வெளியான பிரம்மயுகம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இத்திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X