twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராமராஜனுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில்

    |

    Recommended Video

    Karakattakaran Ramarajan | ராமராஜனுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில்

    சென்னை: நடிகர் ராமராஜன் எம்.ஜி.ஆரை முன்மாதிரியாக வைத்து கலர் கலர் சட்டை அணிந்து வந்தார். தொடர்ச்சியாக கிராமத்து கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்ததற்காகவும், தமிழ் பண்பாடு பற்றின படங்களில் நடித்ததற்காகவும் நடிகர் ராமராஜனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்து பெருமைப்படுத்தியுள்ளது குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில்.

    கலர் கலர் சட்டை, லிப்ஸ்டிக், ட்ரவுசர், ரோஸ் பவுடர், துண்டு போட்டு யாரையாவது பார்த்தால் உடனே நம்ம என்ன சொல்வோம் ராமராஜன் கணக்கா வரான் பா என்று சொல்லுவோம். அந்த அளவிற்கு தனக்கென்று அடையாளத்தையும் தனித்துவத்தையும் நிலை நிறுத்தி கொண்டவர் நடிகர் ராமராஜன்.

    இன்றைய முன்னணி கதாநாயகர்களின் ரசிகர்களுக்கு ராமராஜனை தெரியுமா என்பது சந்தேகமே. ஆனால் இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவரை நாடி கிட்டத்தட்ட அனைத்து தயாரிப்பாளர்களும், இவரின் கால்ஷீட் கிடைக்க இவர் பின்னாடி ஓடினார்கள் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பிஸியாக உச்சாணி கொம்பில் இருந்தவர்.

    மக்கள் நாயகன் ராமராஜன்

    மக்கள் நாயகன் ராமராஜன்

    மது அருந்துதல், புகைப்பிடித்தல் என எந்த ஒரு கெட்ட பழக்கங்களையும் வைத்து தனது படங்களில் நடிக்காதவர். ஒரே ஆண்டில் அதிக படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆன பெருமை நம்முடைய மக்கள் நாயகன் ராமராஜனை சேரும். குறுகிய காலத்திலேயே சினிமாவை கலக்கியவர்.

    நடிப்பு ஆசை

    நடிப்பு ஆசை

    சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு நாடக கலைஞர். அதனாலேயே சிறிய வயது முதல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அவரின் நடிப்பு ஆசை நாடகங்களின் மூலம் நிறைவேறியது. கலை கல்லூரியில் படிப்பை முடித்த ராமராஜனுக்கு பொது துறையில் வேலை கிடைத்த போதும் சேராமல் சினிமா மீது ஆர்வமாக இருந்துள்ளார்.

    உதவி இயக்குநர்

    உதவி இயக்குநர்

    ஒரு திரையரங்கில் டிக்கெட் கொடுப்பது முதல் கேஷியர் வேலை வரை அனைத்தையும் செய்தார். பிறகு அவருக்கு படிப்படியாக சினிமா துறையை சேர்ந்த சிலரோடு பழக்கம் ஏற்பட்டது. அப்படி பழக்கம் பெற்றவர் தான் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ராம.நாராயணன். கிட்டத்தட்ட 30 படங்களில் அவரின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் ராமராஜன். எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். அவரின் இயக்கத்தில் வெளியான மீனாட்சி குங்குமம் திரைப்படத்தில், ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிறகு பல படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்துள்ளார்.

    இயக்குநர் ராமராஜன்

    இயக்குநர் ராமராஜன்

    மறைந்த நடிகர் பாண்டியன், இளவரசி நடித்த மண்ணுக்கேத்த பொண்ணு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார் ராமராஜன். அதன் வெற்றியை தொடர்ந்து ஹலோ யார் பேசுறது, மருதாணி, சோலை புஷ்பங்கள், மறக்கமாட்டேன் போன்ற திரைப்படங்களை இயக்கினார்.
    அவரின் திறமையை பார்த்து வியந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா ராமராஜன் ஒரு படத்தை இயக்கி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் வெளியான படம் தான் மருதாணி.

    நாயகன் ராமராஜன்

    நாயகன் ராமராஜன்

    நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தில் கிராமத்து கதாபாத்திரத்திக்கு பொருத்தமாக இருப்பார் என பாரதிராஜாவின் பரிந்துரையில் கதாநாயகனாக அறிமுகமானார் ராமராஜன். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் ட்ரவுசர் அணிந்து நடித்தார்.

    கிராமத்து நாயகன்

    கிராமத்து நாயகன்

    அந்த படத்தின் பாடல்களான மதுர மரிக்கொழுந்து வாசம் மற்றும் செண்பகமே பாடலும் சூப்பர் ஹிட். இன்றும் அந்த பாடல்களுக்கு ரசிகர் கூட்டம் உள்ளது. அதற்கு பிறகு நேரம் நல்லா இருக்கு, எங்க ஊரு காவல்காரன், என்ன பெத்த ராசா என வரிசையாக கதாநாயகனாக நடித்தார்.

    கரகாட்டக்காரன்

    கரகாட்டக்காரன்

    கரகாட்டக்காரனாக அவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் 500 நாட்களையும் தாண்டி ஓடி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படம் மூலம் ராமராஜன் நடிப்பில், இளையராஜா இசையில், செந்தில்-கவுண்டமணி காமெடி என்றால் படம் நிச்சயம் வெற்றி தான் என்ற செண்டிமெண்ட் உருவானது.
    அந்த காலகட்டத்தில் மோகன், சத்யராஜ், விஜயகாந்த் போன்றவர்கள் வெற்றிப்படங்களை கொடுத்தாலும் கிராமத்து படம் என்றால் ராமராஜன் தான் பெஸ்ட் என்ற அளவிற்கு கொடி கட்டிப் பறந்தவர்.

    நளினியுடன் திருமணம்

    நளினியுடன் திருமணம்

    ரேகா, கவுதமி, கனகா போன்றவர்கள் தான் இவருக்கு சரியான ஜோடிகள். எம்.ஜி.ஆர் அவர்களை முன்மாதிரியாக வைத்து கலர் கலர் சட்டை அணிந்து வந்தார். முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை நளினியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருண், அருணா என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தன. கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

    டாக்டர் ராமராஜன்

    டாக்டர் ராமராஜன்

    தொடர்ச்சியாக கிராம படங்களில் நடித்ததற்காகவும், தமிழ் பண்பாடு பற்றின படங்களில் நடித்ததற்காகவும் ராமராஜன் அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்து பெருமைப்படுத்தியுள்ளது குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில்.

    English summary
    Actor Ramarajan wore color shirts to emulate MGR. The 'Global Achievers Council' has honored actor Ramarajan with an honorary doctorate for his continued work in rural-based stories and films on Tamil culture.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X