Don't Miss!
- News
மக்களிடையே வேறுபாடுகளை விதைத்து பிளவை உருவாக்குகிறார்கள்.. டெல்லி என்.சி.சி.விழாவில் பிரதமர் மோடி
- Automobiles
சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Finance
எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா.. முதலீடு என்னவாகும்.. அதானியால் கஷ்டகாலம்!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
“Le Musk திரைப்படம் ஒரு கனவுலகின் அதிசயம்”: ஏஆர் ரஹ்மானை பாராட்டிய சர்வதேச பிரபலம்!
துபாய்: இசையமைப்பாளராக வலம் வரும் ஏஆர் ரஹ்மான் இப்போது இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார்.
ஏற்கனவே 99 சாங்ஸ் என்ற படத்தின் கதை எழுதி தயாரித்த ஏஆர் ரஹ்மான், லீ மஸ்க் என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி படத்தை இயக்கியுள்ளார்.
36 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமாக உருவாகியுள்ள லீ மஸ்க் படம் குறித்து சர்வதேச பிரபலம் ஒருவர் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
புஷ்பா இயக்குநர் - ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் ஆர்ஆர்ஆர் பட ஹீரோ?: டோலிவுட்டின் அடுத்த ஆக்சன் மஜா!

இசைப்புயலின் புதிய முயற்சி
இந்தாண்டு இரவின் நிழல், கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் பாடல்கள் மூலம் தனது ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்தார் ஏஆர் ரஹ்மான். அடுத்து பத்து தல, மாமன்னன், அயலான், லால் சலாம், பொன்னியின் செல்வன் 2ம் பாகம் என இன்னும் பல படங்களுக்கு பிஸியாக மியூசிக் கம்போஸ் செய்துவருகிறார். இதனிடையே, சமீபத்தில் இந்தியில் 99 சாங்ஸ் என்ற படத்திற்கும் கதை, எழுதி தயாரித்திருந்த ஏஆர் ரஹ்மான், 'லீ மஸ்க்' என்ற குறும்படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படம் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் புதிய முயற்சியாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மனைவி சொன்ன ஐடியா
லீ மஸ்க் படத்தின் கதையை ஏஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா ஒன்லைனாக சொல்ல, பின்னர் அதை கதையாக எழுதி இயக்கியுள்ளார் இசைப்புயல். ஜூலியட் மெர்டினியன் என்ற பெண் சிறுவயது முதல் அநாதையாக இருந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது விதியை மாற்றிய ஆண்களைக் கண்டுபிடிக்க முடிவு செய்கிறார். அதன்படி அந்த ஆண்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை வைத்து அவர்களை எப்படி அடையாளம் காண்கிறாள் என்பது லீ மஸ்க் படத்தின் கதை. இதில், நோரா அரனிசாண்டர், கை பர்நெட் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

பிரபலங்கள் பாராட்டு
லீ மஸ்க் கதையை குராச்சி ஃபீனிக்ஸ் எழுத, ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்தை இயக்கி இசையமைத்துள்ளார். 36 நிமிட குறும்படமாக உருவாகியுள்ள லீ மஸ்க் ரோம் நகரில் 14 வெவ்வேறு கேமராக்களில் சூப்பர் - ரெசல்யூஷன் தரமான வீடியோக்களை கொண்டு புதிய டெக்னாலஜியில் தயாராகியுள்ளது. பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட லீ மஸ்க் பலரின் பாராட்டுகளையும் பெற்றது. அதேபோல், சர்வதேச பிரபலமான ஜிம்மி நுயென் லீ மஸ்க் படத்தை பாராட்டியுள்ளார். குளோபல் ப்ளாக் செயின், டெக் லீடர், மீட்டா வெர்ஷன் போன்றவற்றின் துறை சார்ந்த வல்லுநரான ஜிம்மி நுயென், லீ மஸ்க் படத்தை துபாயில் உள்ள ஏஆர் ரஹ்மானின் ஸ்டூடியோவில் பார்த்துள்ளார்.

ஏஆர் ரஹ்மான் நன்றி
அதன்பின்னர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஜிம்மி நுயென், "லீ மஸ்க் மீட்டா வெர்ஷனின் புதிய தொடக்கம். ஏஆர் ரஹ்மான் இயக்கிய இந்தப் படத்தை பார்த்து பிரமித்துப் போனேன். துபாயில் இதனைக் காணும் வாய்ப்பு கிடைத்தது, இசை, மேக்கிங் என எல்லாவற்றிலும் ஏஆர் ரஹ்மான் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார்" என மனம் திறந்து பாராட்டியுள்ளார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஏஆர் ரஹ்மான், இதனை உலகம் முழுவதும் கொண்டு சென்றதுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

நயன் – விக்கி ஜோடி பாராட்டு
முன்னதாக ஏஆர் ரஹ்மான் இயக்கியுள்ள லீ மஸ்க் படத்தை, விக்னேஷ் சிவன் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. "லீ மஸ்க் அற்புதமான அனுபவமாக இருந்தது. என்ன ஒரு தொலைநோக்கு பார்வை ஏ.ஆர் ரஹ்மான் சார். அனைத்து வகையான கலையிலும் ஏஆர் ரஹ்மான் சார் மாஸ்டர் தான். இதுபோன்று இன்னும் அவர் உருவாக்கும் அற்புதமான அனுபவங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தப் படத்தை நானும் நயன்தாராவும் துபாயில் பார்த்து பிரமித்துவிட்டோம்" என டிவிட்டரில் பதிவிட்டுருந்தார்.