twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த ஷாட்ல உண்மையாவே அஜித் அடிச்சாரு.. துணிவு படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த ஜிஎ.ம் சுந்தர்!

    |

    சென்னை: துணிவு படத்தில் வங்கி அதிகாரியாக நடித்த நடிகர் ஜி.எம். சுந்தர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் அஜித் தன்னை நிஜமாகவே அடித்தார் என்றும் இருவருக்கும் இடையேயான டைமிங் நல்லாவே படத்தில் வொர்க்கவுட் ஆனது என்றும் பேசி உள்ளார்.

    இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் படத்தில் நடிகராக அறிமுகமானவர் ஜிஎம் சுந்தர்.

    சார்பாட்டா பரம்பரை படத்தில் சமீபத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் மீம் மெட்டீரியலாகவே மாறி ரசிகர்கள் மத்தியில் அவரை மிகவும் பிரபலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    வாரிசு VS துணிவு... இறுதிக்கட்ட பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் யார் முன்னிலை?: ரசிகர்கள் எதிர்பார்ப்புவாரிசு VS துணிவு... இறுதிக்கட்ட பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் யார் முன்னிலை?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

    ஜி.எம் சுந்தர்

    ஜி.எம் சுந்தர்

    புன்னகை மன்னன் படத்தில் நடிக்க ஆரம்பித்த ஜி.எம் சுந்தர் கமல்ஹாசனின் சத்யா, கடமை கண்ணியம் கட்டுப்பாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்த அவர் விஜய்சேதுபதியின் காதலும் கடந்து போகும் படத்திற்கு பிறகு மீண்டும் பிசியான நடிகராக மாறி உள்ளார். சீதக்காதி, மகாமுனி, மண்டேலா, சார்பட்டா பரம்பரை, ரைட்டர் படங்களில் நடித்த ஜிஎம் சுந்தர் அஜித் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

    அஜித் உடன்

    அஜித் உடன்

    கடந்த ஆண்டு வெளியான வலிமை படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்த ஜி.எம் சுந்தர் இந்த ஆண்டு வெளியான துணிவு படத்திலும் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான இரு படங்களிலும் நடித்த ஜி.எம். சுந்தர் சமீபத்தில் ஃபிலிமி பீட்டுக்கு அளித்த பேட்டியில் அஜித்துடன் இணைந்து நடித்த காட்சிகள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

    வங்கி அதிகாரி

    வங்கி அதிகாரி

    போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கிய துணிவு படத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த நிலையில், ஜி.எம். சுந்தர் வங்கி அதிகாரியாக வில்லனின் கையாளாக நடித்து அசத்தி இருப்பார். மக்கள் குறைதீர் கூட்டம் போன்ற காட்சியில் நடிகர் அஜித் ஜி.எம். சுந்தரை கன்னத்தில் அறையும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

    நிஜமாவே அடித்தார்

    நிஜமாவே அடித்தார்

    அந்த காட்சிகள் எப்படி எடுக்கப்பட்டது என்கிற கேள்விக்கு செம கேஷுவலாக பதில் அளித்த ஜி.எம். சுந்தர் அஜித் நிஜமாவே அடித்தார். நான் தான் அடிக்க சொன்னேன். அப்போ தான் ரசிகர்களுக்கு என் ரியாக்‌ஷன் ரியலா இருக்கும்னு சொன்னேன். அந்த காமெடி சீன் அஜித்துக்கும் எனக்கும் இருந்த டைமிங் எல்லாமே நல்லா சின்க் ஆச்சு என பேசி உள்ளார் ஜி.எம். சுந்தர்.

    வங்கிகளில் நடக்கும் மோசடி

    வங்கிகளில் நடக்கும் மோசடி

    சில தனியார் வங்கிகளில் கிரெடிட் கார்டு மூலமாகவும், மினிமம் பேலன்ஸ் வைப்பது தொடர்பாகவும் மோசடி நடைபெற்று வருவதாகவும், மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை போடுங்க 15 வருஷத்துக்கு அப்புறம் பல மடங்கு பணம் கிடைக்கும் என ஏமாற்றி விட்டு உங்க காசு எல்லாம் திவால் ஆகிடுச்சு என சொல்லிடுவாங்க என துணிவு படத்தை எடுத்து மக்களுக்கு பணத்தின் மீதும் வங்கிகள் மீதும் விழிப்புணர்வு தேவை என இயக்குநர் எச். வினோத் இந்த படத்தில் வலிமையான கருத்தை முன் வைத்திருக்கிறார். படம் பார்த்துட்டு இதுவரை எந்தவொரு வங்கி நிர்வாகமும் படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்காமல் இருப்பது படத்திற்கு கிடைத்த வெற்றி என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    English summary
    Popular Actor GM Sundar opens up about Ajith hit him really for Thunivu pre climax scene in a recent interview. He also shares about the timing sense between Ajith and him works very well in that movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X