அந்த பத்து கோடி என்னாச்சு... உத்தமவில்லன் கமலுக்கு எதிராக ஞானவேல் ராஜா மல்லுக்கட்டு
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய உத்தம வில்லன் படத்திற்கு ஏற்பட்ட சிக்கலை தீர்ப்பதற்காக, தன்னிடம் வாங்கிய 10 கோடி ரூபாயை இது வரையிலும் திருப்பித் தரவில்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மேடைகளில் பேசவே ஒரு காலத்தில் தயங்கியவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. ஒரு கட்டத்தில் பல விதமான பதிவுகளை மேடைகளில் தைரியமாக பேச துவங்கினார். கோபத்துடனும் ஆக்ரோஷோத்துடனும் பல பேட்டிகள் கொடுத்தார்.

சினிமா என்று வந்துவிட்டால், அதுவும் பணம் என்று வந்துவிட்டால் எப்போதுமே பிரச்சனை தான். பணம் வாங்குவதும், பைனான்ஸ் செய்வதும் சினிமாவில் சர்வ சாதாரணமாக நடக்கின்ற மிக முக்கியமான ஒரு தொழில்.
சினிமா தயாரிப்பு துறையில், ஞானவேல் ராஜாவின் மீது நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. அதே சமயம் அவருடன் சண்டை போடுகின்ற பல .பிரபலங்களும் உண்டு. அந்த வகையில் தன்னிடம் வாங்கிய 10 கோடி ரூபாய் பணத்தை நடிகர் கமல்ஹாசன் திருப்பித் தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான உத்தமவில்லன் படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, அதற்கு அட்வான்ஸ் பணமாக 10 கோடி ரூபாயை கேட்டுப் பெற்றதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
உத்தமவில்லன் படம் மூலம் ஏற்கனவே இயக்குநர் லிங்குசாமிக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே இன்று வரை கருத்து வேறுபாடு இருப்பது அனைவருக்கும் தெரிந்த விசயமே. இந்த நிலையில், நான்கு ஆண்டுகள் ஆகியும் கமல்ஹாசன், இதுவரை தமது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை எனவும், 10 கோடி ரூபாய் பணத்தையும் திருப்பித் தரவில்லை என்றும் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
சினிமா தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா கொடுத்திருக்கும் இந்த புகார், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமில்லாமல் கமல்ஹாசனின் இப்போதைய மையம் இமேஜ், சினிமா அனுபவம், அவர் கடந்த வந்த பாதை, இதை எதைப்பற்றியும் கவலை படாமல், தைரியமாக ஒருவர் புகார் அளிக்கிறார் என்றால், இதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று பலர் குழப்பத்தில் உள்ளனர்.
இவை அனைத்தும் உண்மை தானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











