சிம்பு வரவே இல்லை.. பெரிய லாஸ்.. எல்லாம் போச்சு.. தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார்!?

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்.

Recommended Video

Simbhu Mufti Movie Dropped: டிராப் ஆகிறதா சிம்புவின் ''மப்டி'' ரீமேக்?-வீடியோ

சென்னை: நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்.

நடிகர் சிம்பு மீது பல தயாரிப்பாளர்கள் இதுவரை புகார் அளித்துள்ளனர். வாலு படம் , கெட்டவன், மன்மதன், ஏஏஏ என்று பல படங்களில் சிம்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு ரெட் கார்ட் கொடுக்க கூட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக முடிவுகள் எடுக்கப்பட்டது.பல திறமைகள் நிறைந்த சிம்பு அந்த அளவிற்கு பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

என்ன சர்ச்சை

என்ன சர்ச்சை

இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு தமிழில் நடிக்கும் கன்னட படமான மப்டி படத்தின் ரீமேக் தற்போது கைவிடப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். இதன் மூலம் கடந்த இரண்டு வருடத்தில் சிம்புவிற்கு மூன்றாவது படம் டிராப் ஆகிறது. கான், மாநாடு படங்களை தொடர்ந்த இந்த படமும் டிராப் ஆகியுள்ளது.

படம் எப்படி

படம் எப்படி

இது தொடர்பாக கன்னட படமான மப்டி படத்தை ரீமேக் செய்யும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில் சிம்பு சரியாக படத்தின் ஷூட்டிங்கிற்கு வரவில்லை. இதனால் படத்தின் செலவு பெரிய அளவில் அதிகமாகி உள்ளது.

மோசம்

மோசம்

இதனால் படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அதேபோல் படத்தின் மற்ற நடிகர்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கும் தேவையில்லாமல் காசு கொடுக்கும் நிலை நேர்ந்துள்ளது. முதல் 10 நாட்கள் ஷூட்டிங்கே நடக்கவில்லை என்று அவர் தனது புகாரில் கூறி உள்ளதாக தகவல்கள் வருகிறது.

மீண்டுமா

மீண்டுமா

இதன் மீதான விசாரணை விரைவில் நடக்கும் என்கிறார்கள்.இதனால் மீண்டும் ஏஏஏ, வாலு படம் போல சிம்பு இன்னொரு பிரச்சனைகளுக்கு உள்ளாகி உள்ளார். தற்போது சிம்பு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் தனியாக ஹீரோவாக நடித்து படம் எதுவும் நீண்ட நாட்களாக வெளியாகவில்லை. தற்போது ஞானவேல் ராஜாவும் சிம்பு மீது புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: simbu சிம்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X