சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் படம் எடுக்க தயார்.. மனம் மாறிய இயக்குநர்.. பிரச்சனை தீர்ந்ததா?

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் படம் எடுக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று இயக்குநர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Prince Release Date அறிவிப்பு... ஆர்வத்தில் ரசிகர்கள் *Kollywood | Filmibeat Tamil

மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்ததற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக் கோரி நடிகர் சிவகார்த்திகேயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு, தயாரிப்பாளர், மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை என்றும், சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் படம் எடுக்கப்பட்டதாகவும், இதனால், எனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் என்றும் பதிலளித்திருந்தார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சிவகார்த்திகேயன் ஞானவேல் ராஜா இடையிலான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிரச்சனையை சுமுகமாக தீர்ப்பதற்கு சமரச தீர்வாளராக நீதிபதி சுந்தர் நியமிக்கப்பட்டார். மேலும், ஞானவேல் ராஜா படங்களை ரிலீஸ் செய்யக் கூடாது என்று வலியுறுத்திய சிவகார்த்திகேயனின் கோரிக்கையை நீதிபதி நிரகாரித்தார்.

ஞானவேல் ராஜா

ஞானவேல் ராஜா

இந்நிலையில்,யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள தயாரிப்பாளனர் ஞானவேல் ராஜா, மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக கொடுப்பதாக பேசியிருந்தோம். ஆனால், அந்தப் படத்திற்கு பிறகு, நான் அடுத்த படத்தை தொடங்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால், அந்த நேரத்தில் பெரும் பணப்பிரச்சினையில் சிக்கிக்கொண்டேன்.

அவசரப்பட்டு விட்டார்

அவசரப்பட்டு விட்டார்

இதனால், சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கவேண்டிய பாக்கித் தொகையை என்னால் தரமுடியாமல் போனது. அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தில் 30 முதல் 40 சதவீதத்தை ஏற்கெனவே கொடுத்து விட்டோம். மீதி தொகையை கொடுக்க காலதாமதம் ஆனதால், அவர் பொறுமை இழந்து வழக்கு போட்டுவிட்டார். அவசரப்பட்டு வழக்குப்போட்டுவிட்டாரே என்று ஆரம்பத்தில் எனக்கும் அவர் மீது கோபம் வந்தது. பின்னர் யோசித்த போது அவர் நடித்ததற்கான சம்பளத்தை தானே கேட்கிறார் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

எந்த தயக்கமும் இல்லை

எந்த தயக்கமும் இல்லை

இதுபற்றி பேச சிவகார்த்திகேயனை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவரிடம் பேசமுடியவில்லை. எனக்கு சிவகார்த்திகேயன் மீது எந்த வருத்தமும் இல்லை, அவர் விருப்பப்பட்டால், தேதி கொடுத்தால், மீண்டும் அவரை வைத்து படம் எடுக்க தயாராக இருக்கிறேன் இதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று ஞானவேல் ராஜா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

பிரின்ஸ்

பிரின்ஸ்

இதனிடையே சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படம் தயாராகி வருகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X