twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முன்னனி தயாரிப்பாளரின் பிறந்தநாள்.. ஆர்யாவின் வாய்ஸ் ஓவரில் வைரலாகும் வீடியோ

    |

    சென்னை: தமிழ் சினிமாவில் முன்னனி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஞானவேல் ராஜா. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் உரிமையாளர்.

    தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் படங்களை தயாரித்தவர் ஞானவேல் ராஜா.

    ஞானவேல் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு புது விதமாக அவரின் வாழ்க்கை வரலாற்றை ஆர்யாவின் வாய்ஸ் ஓவரில் பதிவிட்டு யூ டியூபில் வெளியிட்டுள்ளனர்.

    தாறுமாறான சம்பவங்கள் அடங்கிய கம்மார சம்பவம்... ஜியோ சினிமாவில் வெளியீடு தாறுமாறான சம்பவங்கள் அடங்கிய கம்மார சம்பவம்... ஜியோ சினிமாவில் வெளியீடு

    டபுள் ஜாக்பாட்

    டபுள் ஜாக்பாட்

    வீடியோவின் தொடக்கத்தில் இந்த குட்டி ஸ்டோரியின் ஹீரோவாக ஞானவேல் ராஜாவை ஆர்யா முன்மொழிகிறார். ஞானவேல் ராஜாவின் தந்தை ஒரு கொங்கு மண்டல விவசாயி, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவருக்கு ஜூன் 30ம் தேதி 1977ல் டபுள் ஜாக்பாட் அடிக்கிறது. எம்.ஜி.ஆர் முதல் முறையாக முதலமைச்சர் ஆக, ஞானவேல் ராஜாவும் அவருக்கு மகனாக பிறக்கிறார்.

    பெட்ரோல் பம்ப்

    பெட்ரோல் பம்ப்

    பின்னர் ஞானவேல் ராஜா 9ம் வகுப்பு படிக்கும் போது அவரின் குடும்பம் சென்னைக்கு சென்றடைகிறது. பெட்ரோல் பம்ப் தொழிலை அவரின் தந்தை மேற்கொள்ள ஞானவேல் ராஜா பள்ளிக்கு செல்கிறார். அங்கு நடிகர் கார்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டு எதிர்காலத்தில் ஒன்றாக படம் பண்ண திட்டம் தீட்டுகின்றனர்.

    விருது பெற்றார்

    விருது பெற்றார்

    பின்னர் நடிகர் கார்த்தி மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல, லயோலா கல்லூரியில் படிக்க ஞானவேல் ராஜா போராடி சீட்டு வாங்குகிறார். பின்னர் தந்தையின் தொழிலில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட பெட்ரோல் பம்பில் பொறுப்பேற்று அங்கு தொழிலை தூக்கி நிறுத்துகிறார். அதுமட்டுமின்றி அம்பானியின் 500 ரூபாய் செல்போனின் சென்னை டீலர்ஷிப்பை வாங்கி அதில் இந்திய அளவில் பெஸ்ட் டீலர் விருதை பெறுகிறார்.

    சூர்யா, கார்த்தி

    அதன் பின்னர் நடிகர் கார்த்தி நாடு திரும்புகிறார். திட்டம் தீட்டியது போல் படங்களை தயாரிக்க தொடங்குகிறார் ஞானவேல் ராஜா. சில்லுனு ஒரு காதல், பருத்திவீரன் என சூர்யா, கார்த்தி படங்களை தயாரிக்க தொடங்கி தொழிலில் எப்படி வெற்றி கொடி நாட்டினார் என்பது போன்ற பல விஷயங்களை வீடியோவில் ஆர்யா வாய்ஸ் ஓவரில் கூறியுள்ளார்.

    English summary
    Producer Gnanavel Raja's life history has been released in Arya's voice over.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X