கங்குவா படம்.. ஞானவேல் ராஜாவுக்கு 143 கோடி ரூபாய் கடனா?.. கார்த்தி படத்துக்கும் சிக்கல்?

சென்னை: சூர்யா நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி பெரும் தோல்வி படமாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணமே சூர்யாவும், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும்தான் என்று ரசிகர்கள் சொன்னார்கள். அதற்கு காரணம் அவர்கள் இரண்டு பேருமே படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படத்தை பற்றி பேசி ஓவராக ஹைப் ஏற்றிவிட்டார்கள். சூழல் இப்படி இருக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு பெரிய கடன் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சூர்யாவை வைத்து சிவா கங்குவா படத்தை இயக்கினார். அந்தப் படம் கடந்த மாதம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸான படம் ரசிகர்களை ஏமாற்றியது. மேலும் படத்தை ரசிகர்கள் வைத்து செய்துவிட்டார்கள். 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று சொன்ன ஞானவேல் ராஜா இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.அவரது பேச்சுதான் கங்குவாவின் தோல்விக்கு முதல் காரணம் என ரசிகர்கள் ஓபனாகவே கூறினார்கள்.

kanguva suriya gnanavel raja

காட்டமான ஜோதிகா: சூழல் இப்படி இருக்க ஜோதிகாவோ படத்துக்கு சப்போர்ட் செய்திருந்தார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நடிகராக இருப்பதற்காகவும், சினிமாவை முன்னோக்கி அழைத்து செல்ல கனவு காண்பதற்காகவும் சூர்யாவை நினைத்து பெருமையாக இருக்கிறது. படத்தின் முதல் அரைமணி நேரம் ஒர்க் அவுட் ஆகவில்லைதான். ஒலியும் சரியாக இல்லைதான். அதேசமயம் குறைபாடுகள் என்பது படத்தில் ஒரு பகுதியாகும்.

இதுவரை பார்க்காத வேலை: முழுமையான மூன்று மணி நேரத்திலிருந்து முதல் அரைமணி நேரம் சரியில்லைதான். இருந்தாலும் இது ஒரு முழுமையான சினிமா அனுபவம். தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத கேமரா வேலையை ஒளிப்பதிவாளர் வெற்றி செய்திருக்கிறார். ஊடகங்கள் மற்றும் சிலரின் நெகட்டிவ் விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை பின் தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது போன்ற படங்களுக்கு இந்த அளவு நெகட்டிவ் விமர்சனங்களை அவர்கள் கொடுக்கவில்லை.

ஒன்றும் செய்யவில்லை: படத்தின் இரண்டாம் பாதியில் பெண்களின் ஆக்‌ஷன் காட்சி போன்ற பாசிட்டிவ்களை விமர்சகர்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். 3டி தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளில் படக்குழு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு கைதட்டல் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் முதல் நாள் முதல் ஷோ முடிவதற்கு முன்பாகவே கங்குவாவுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. அதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. கங்குவா டீம் பெருமையாக இருங்கள். நெகட்டிவ் விமர்சனங்கள் தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்காக வேறு எதையும் செய்யவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

புதிய தகவல்: இந்நிலையில் கங்குவா பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தப் படம் சரியாக வசூல் செய்யாததால் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவுக்கு 143 கோடி ரூபாய் அளவில் கடன் வந்துவிட்டதாகவும்; அதன் காரணமாக கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் வா வாத்யாரே படத்தை ரிலீஸ் செய்வதில் அந்த நிறுவனத்துக்கு சிக்கல் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவலை வலைப்பேச்சு குழுவினர் தங்களது வீடியோவில் பகிர்ந்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X