நடுரோட்ல விட்டுடுவாங்க.. வா வாத்தியார் விழாவில் சிவகார்த்திகேயனை அட்டாக் செய்த தயாரிப்பாளர்?.. ஆத்தாடி

சென்னை: ஞானவேல் ராஜா தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் வா வாத்தியார். சில வருடங்களுக்கு முன்பே படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டாலும்; சில காரணங்களால் ரிலீஸாகாமல் இருந்தது. ஏகப்பட்ட ரிலீஸ் தேதிகளை படக்குழு அறிவிப்பதும், பிறகு பின் வாங்குவதுமாக நிலைமை இருந்தது. இப்போது ஒருவழியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை ரிலீஸாவது உறுதியாகியுள்ளது.

காதலும் கடந்து போகும், சூதுகவ்வும் என இரண்டே இரண்டு படங்களை மட்டுமே இயக்கியிருப்பவர் நலன் குமாரசாமி. அந்த இரண்டு படங்க்ளுமே வெவ்வேறு ஜானரில் உருவானவை. காதலும் கடந்து போகும் படம் கொரியன் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் தமிழுக்கு தகுந்தவாறு விஷயங்களை சேர்த்திருந்தார். அவ்விரண்டு படங்களுமே ரிலீஸாகி பத்து வருடங்களை கடந்துவிட்டாலும் இன்னமும் ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரைட் படங்கள் லிஸ்ட்டில் இருக்கின்றன.

வா வாத்தியார்: இரண்டு படங்களை முடித்துவிட்டு கார்த்தியை வைத்து வா வாத்தியார் படத்தை இயக்கினார் நலன் குமாரசாமி. இதில் க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கியமான கேரக்டர்களை படத்தில் ஏற்றிருக்கிறார்கள். படத்தில் எம்ஜிஆர் ரசிகனாக கார்த்தி கலக்கியிருக்கிறார். முதன்முறையாக கார்த்தியும், நலனும் சேர்ந்திருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படத்தின் மீது வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

Gnanavel Raja s Remarks on Sivakarthikeyan at Va Vaathiyar Event Trigger Controversy
Photo Credit:

ரிலீஸில் தாமதம்: ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருக்கிறார். படத்தின் பணிகள் முடிந்து நீண்ட காலம் ஆகிவிட்டாலும்; சில காரணங்களால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தார் தயாரிப்பாளர். அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்பட்டன. முக்கியமாக ஞானவேல் ராஜா கங்குவா படத்தை தயாரித்து கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கிவிட்டார்; அதனால்தான் அவரால் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பின.

நாளை ரிலீஸ்: படத்தின் ரிலீஸ் தேதியையும அறிவிப்பதும், பிறகு அதிலிருந்து பின்வாங்குவதுமாக இருந்தது படக்குழு. இதனால் படம் வெளியாகுமா வெளியாகாதா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துவிட்டது. இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. அதற்கான அத்தனை வேலைகளும் தொடங்கிவிட்டன. நாளை ரிலீஸாவதால் இன்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.

சூர்யா பற்றி உருக்கம்: அப்போது பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, "எனக்கு நிறைய கடன் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான்தான். எல்லோருக்கும் பிரச்னை இருக்கிறது. யாரும் இங்கே பாவம் எல்லாம் இல்லை. இந்த வருடம் சிறப்பான வருடமாக அமையும். இந்தத் தருணத்தில் முக்கியமான சிலருக்கு நான் நன்றி சொல்லிகொள்ள விரும்புகிறேன். முதலில் சூர்யா அண்ணாவுக்கு நன்றி சொல்கிறேன். எனக்கு அண்ணன் மாதிரி, தம்பி மாதிரி என மேடையில் அழுதுவிட்டு; பிரச்னை என்றால் நடுத்தெருவில் விட்டுவிடுவார்கள்.

சூர்யா அப்படி இல்லை: ஆனால் சூர்யா அப்படி இல்லை. எனக்கு துணையாக நின்றவர் அவர். உலக சினிமாவிலேயே தனது தயாரிப்பாளருக்கு இவ்வளவு நலல்து யோசிக்கும் ஒரு நடிகர் சூர்யாவை தவிர்த்து வேறு யாரும் இருப்பார்களா என தெரியவில்லை. என்னுடைய கஷ்டமான காலத்தை மிக இயல்பாக கடந்து போக உதவி செய்தார்" என்றார். அவரது இந்தப் பேச்சு பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது ரசிகர்கள் மத்தியில். அதாவது கங்குவா மட்டுமே ஞானவேல் ராஜாவுக்கு பெரிய அடி இல்லை. சிவகார்த்திகேயனை வைத்து அவர் தயாரித்த மிஸ்டர் லோக்கல்தான் முதன்முறையாக பலத்த அடி வாங்கியது. மேலும் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை நீதிமன்றம் வரைகூட சென்ற்து நினைவுகூரத்தக்கது.

இப்போது அவர் நடுரோட்டில் விட்டுவிடுவார்கள் என சொன்னது சிவகார்த்திகேயனைத்தான் மறைமுகமாக அட்டாக் செய்தது மாதிரி இருக்கிறது. அந்தப் படத்தின் தோல்விக்கு பிறகு ஞானவேல் ராஜாவை எஸ்கே கண்டுகொள்ளவே இல்லை என பேச்சுக்கள் எழுந்தன. இப்போது அவர் இப்படி பேசியிருப்பதை பார்த்தால் எஸ்கேவுக்கும், ஞானவேலுவுக்கும் பிரச்னை இன்னும் தீரவில்லையோ என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X